thaimaman thanga mothiram thittam : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தேதிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
thaimaman thanga mothiram thittam : திருப்பூரில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் தேதிகள் பகுதிவாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1/7
அரசின் முக்கிய நோக்கம்
அரசின் முக்கிய நோக்கம்: தாய்மையையும் குழந்தை பிறப்பையும் போற்றும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை அதிகரிக்கவும், பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும் மாண்புமிகு தமிழக முதல்வரால் சட்டமன்றத்தில் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் 28.09.2026 அன்று முதல்வரால் தமிழகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது
2/7
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
2. யாருக்கெல்லாம் கிடைக்கும்? : 22.06.2026 அன்று முற்பகல் 12.00 மணி முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அரசு சார்பில் வழங்கப்படுகிறது.
3/7
தேவைப்படும் முக்கிய அடையாள ஆவணங்கள்
3. தேவைப்படும் முக்கிய அடையாள ஆவணங்கள்: இத்திட்டத்தின் பலனைப் பெற தாய்மார்கள் தமிழ்நாடு குடியிருப்பு அடையாளச் சான்றாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். அதன்படி EKYC பதிவு பெற்ற ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை அல்லது அஞ்சல் துறை முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றைச் சமர்ப்பிக்கலாம்.
4/7
விநியோக நேரம் மற்றும் வாகன வசதி
4. விநியோக நேரம் மற்றும் வாகன வசதி: பயனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக அந்தந்தப் பகுதிகளிலிருந்து வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தங்க மோதிரங்கள் காலை 10.00 மணி மற்றும் மதியம் 1.00 மணி என நாள்தோறும் இரு வேளைகளில் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.
5/7
நெரிசலைத் தவிர்க்க புதிய நடைமுறை:
5. நெரிசலைத் தவிர்க்க புதிய நடைமுறை: மையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, ஒவ்வொரு மையத்திலும் நாள் ஒன்றுக்குக் காலை 25 பேருக்கும், மதியம் 25 பேருக்கும் மட்டுமே மோதிரம் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான பிரத்யேக அழைப்பிதழ்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகத் தாய்மார்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே வருகை தந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
6/7
மருத்துவமனை வாரியாக விநியோக தேதிகள்
6. மருத்துவமனை வாரியாக விநியோக தேதிகள்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: 13.10.2026 முதல் 18.11.2026 வரை திருப்பூர் மாநகராட்சி, அவிநாசி, திருப்பூர், குன்னத்தூர், பொங்கலூர் மற்றும் பல்லடம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. உடுமலை அரசு மருத்துவமனை: 13.10.2026 முதல் 26.10.2026 வரை உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.
7/7
தாராபுரம் அரசு மருத்துவமனை:
தாராபுரம் அரசு மருத்துவமனை: 13.10.2026 முதல் 22.10.2026 வரை தாராபுரம், மூலனூர், வெள்ளகோவில், காங்கேயம் மற்றும் குண்டடம் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ உதவி எண் விவரம்: தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு 9840713553 என்ற உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது