• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள்.. தீபாவளிக்கு விற்பனை? விலை எவ்வளவு?

டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள்.. தீபாவளிக்கு விற்பனை? விலை எவ்வளவு?

Written ByUmabarkavi K
Published: Oct 17, 2026, 04:16 PM IST|Updated: Oct 17, 2026, 04:23 PM IST
joinshare
Tasmac Latest News: டாஸ்மாக்கில் 4 வகையான பீர்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 4 வகையான புதிய பீர்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tasmac Latest News: தற்போது டாஸ்மாக்கில் பீர் வகைகள் 17 ரகங்கள் தற்போது விற்பனையில் உள்ள நிலையில், மேலும் 4 புதிய பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது. 
 

Tasmac1/5

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மூலம் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் மதுபான கடைகளில் 800க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், வோட்கா, பீர் வகைகள், பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது.
Tasmac2/5

டாஸ்மாக்கில் 21 வகையான பீர்கள் விற்பனை

அந்த வகையில், பீர் வகைகளில் மொத்தம் 17 ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழு பீர் ஆலைகளில் இருந்து 21 வகையான பீர்களைக் கொள்முதல் செய்கிறது. தற்போது கிங்பிஷர், பிரிட்டீஷ் எம்பயர், எஸ்என்ஜே 10000, ஸ்பீல் ட்ரிபிள் ஸ்ட்ராங், பிளாக் பேர்ல், டியுபார்க், பட்வைசர், பூம், கல்யாணி பிளாக் லேபிஸ், பிளாக் பஸ்டர் ஆகிய ரகங்கள் விற்பனையில் உள்ளன.
Tasmac3/5

டாஸ்மாக்கில் அறிமுகமாகும் 4 வகையான பீர்கள்

இந்த நிலையில், டாஸ்மாக்கில் 4 வகையான புதிய பீர்கள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கர்நாடகாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஹெய்னஹென் சில்வர் பிரீமியம், சத்தீஸ்கரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிம்பா ரோவர் சீரிஸ் பிரீமியம், மைசூரில் இருந்து லீ மவுண்ட் ஸ்ட்ராங பீர், ஸ்டோக் ஸ்ட்ராங் பீரை இறக்குமதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Tasmac4/5

4 வகையான புதிய பீர்களின் விலை என்ன?

இந்த ரகங்கள் குறைந்தபட்சம் ரூ.250 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அறிமுகப்படுத்தவதாக கூறப்படும் இந்த பீர் ரகங்கள் எலைட் மதுபான கடைகளில் கிடைக்கும் எனவும் தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tasmac5/5

பீர் வகைகள் ரூ.25 வரை உயர வாய்ப்பு

தமிழக அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு 21 வகையான பீர் வகைகளும், ஏழு வகையான இதர மதுபானங்களும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும், 4 வகையான மதுபானங்களும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே, வரும் நாட்களில் பீர் வகைகள் ரூ.25 வரை உயர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மதுபிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில்  17 பேர் பலி! என்ன நடந்தது?

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

2

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

3

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

4

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

5

Explained: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயம்.. 6 நாட்களாக தேடும் போலீஸ்.. என்ன நடக்கிறது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.