Trichy district news : திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருக்கும் பேச்சுப் போட்டி குறித்த அறிவிப்பை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Trichy district news : திருச்சியில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை கிடைக்கும். முழு விவரம்
1/5
சிறப்புப் பேச்சுப்போட்டி
தமிழ் அறிஞர்களைப் போற்றும் சிறப்புப் பேச்சுப்போட்டி - தமிழ் அறிஞர்களின் இலக்கியப் பணிகளையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டுகளையும் நினைவுகூரும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகத் தனித்தனியே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.
2/5
போட்டி நடைபெறும் நாள்
போட்டி நடைபெறும் நாள் மற்றும் இடம் - இப்பேச்சுப்போட்டிகள் வரும் 26.11.2026 அன்று திருச்சியில் உள்ள மாவட்ட மைய நூலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளன. திறமையுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடியாக இதில் கலந்துகொண்டு தங்களது தமிழ் மொழித் திறமையை வெளிப்படுத்தலாம்.
3/5
போட்டி நேரம்
போட்டி நேரம் மற்றும் பங்கேற்பதற்கான நிபந்தனை - பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் காலை 9:30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் பிற்பகல் 2:00 மணிக்கும் தொடங்கும். போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் நேரில் வர வேண்டும்.
4/5
ரொக்கப் பரிசுகள் விவரம்
ரொக்கப் பரிசுகள் விவரம் - போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்குத் தனித்தனியே ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.5,000, இரண்டாம் பரிசு பெறுபவருக்கு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாணவருக்கு ரூ.2,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும்
5/5
பரிசு மற்றும் சான்றிதழ்
பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நாள் - பேச்சுப்போட்டியில் வெற்றிபெறும் சிறந்த பேச்சாளர்களுக்கு உரிய பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வரும் 03.12.2026 அன்று முறைப்படி வழங்கிச் சிறப்பிக்கப்பட உள்ளன. திருச்சிராப்பள்ளி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது