• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி அறிவிப்புகள்! அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி அறிவிப்புகள்! அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 07, 2026, 18:11 IST|Updated: Sep 07, 2026, 18:21 IST
joinshare
பத்திரப்பதிவுத்துறையில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள அதிரடி மாற்றங்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சனிக்கிழமை கட்டாயப்பணி ரத்து, இணையவழி சான்றுகள் உள்பட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
 

Government Employees Good News1/7

பத்திரப்பதிவுத்துறை

பத்திரப்பதிவுத்துறையின் மானியக் கோரிக்கையின் கீழ், பொதுமக்களின் சேவைகளை எளிதாக்கவும் அலுவலகப் பணிகளை நவீனப்படுத்தவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில், சனிக்கிழமை கட்டாயப்பணி ரத்து, இணையவழி சான்றுகள் உள்பட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்...
Government Employees Good News2/7

பிறப்பு, இறப்புச் சான்றிதழ்

பிறப்பு இறப்புச் சான்றிதழ்களை பெற புதிய வசதி - 2018 முதல் பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்கள், சங்கங்கள் மற்றும் சீட்டுப் பதிவு ஆவணங்களின் உண்மை நகல் (True Copy) மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் இணைய வழியில் உரிய கட்டணம் செலுத்தியவுடன், மையக் கணினி சான்றுடன் கூடிய நகல்கள் உடனடியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Government Employees Good News3/7

நில மோசடி

கோயில், வக்ஃபு வாரிய நில மோசடிகளைத் தடுக்க API இணைப்பு - இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்களில் மோசடிப் பதிவுகள் நடப்பதைத் தடுக்கவும், நிலங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Government Employees Good News4/7

சிறப்பு வசதி

தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் ‘STAR’ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு API இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் நேரடியாகவே STAR தளத்தில் நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் சிறப்பு வசதியும் உருவாக்கப்படுகிறது.
Government Employees Good News5/7

தரவு பகுப்பாய்வு மையம்

ரூ.1.50 கோடியில் தரவு பகுப்பாய்வு மையம் - மாநிலம் முழுவதும் பதிவாகும் ஆவணங்கள் மற்றும் வழிகாட்டி மதிப்புகளைத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்ய ரூ.1.50 கோடி செலவில் ‘தரவு பகுப்பாய்வு மையம்’ அமைக்கப்படவுள்ளது. GIS மற்றும் தரவுப் பகுப்பாய்வு வசதிகளுடன் கூடிய பிரத்யேகக் கணினி உள்கட்டமைப்பு பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உருவாக்கப்பட்டு, STAR தரவுகளை ஆய்வு செய்து ஆதாரங்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க இது வழிவகுக்கும்.
Government Employees Good News6/7

சார்பதிவாளர் அலுவலகங்கள்

சார்பதிவாளர் அலுவலகங்கள் வார நாட்களில் மட்டுமே செயல்படும் - வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Government Employees Good News7/7

கட்டாயப்பணி முறை

அதன்படி, சனிக்கிழமைகளில் இயங்கி வந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்றும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை முழுமையாகக் கைவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.