Sun Transit: இன்னும் 5 நாட்களில் கிரகங்களின் அரசரான சூரியன் விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி 5 ராசிகளின் வாழ்வில் அற்புதமான நன்மைகளை அளிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Suriyan Peyarchi Palangal: சூரியன் மீண்டும் தனது ராசியை மாற்றவுள்ளார். இம்முறை, சூரியன் துலாம் ராசியிலிருந்து விலகி விருச்சிக ராசிக்குள் பெயர்ச்சி ஆவார். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த சூரியன் பெயர்ச்சி சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையக்கூடும். குறிப்பாக, 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களின் நிதி நிலை மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்குப் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், மற்றவர்களுக்கு வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம்.
1/8
சூரியன் பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் இது பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
2/8
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு, இந்த சூரிய பெயர்ச்சி நிதி ரீதியான நிம்மதியைத் தரக்கூடும். திடீர் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்களில் சாதகமான தீர்வுகள் கிடைக்கலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் தங்கள் திறமையையும் கடின உழைப்பையும் வெளிப்படுத்த வாய்ப்பு பெறுவார்கள். கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன.
3/8
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சூரியன் பெயர்ச்சி சாதகமாக அமையக்கூடும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். கடின உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
4/8
கன்னி
கன்னி ராசியினரின் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கக்கூடும். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படக்கூடும். குடும்பத்தில் நிலவும் சிக்கல்கள் தீருவதால், இல்லச் சூழல் இனிமையாக மாற வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
5/8
துலாம்
சூரியன் பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசியில் பிறந்தவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அவர்களின் பணி பாராட்டப்படும். தொழில் செய்பவர்களுக்கு, புதிய தொடர்புகள் சாதகமாக அமையக்கூடும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்க வாய்ப்புள்ளது.
6/8
விருச்சிகம்
சூரியன் விருச்சிக ராசியில்தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகையால், இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, ஆளுமை மேம்படும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடும்.
7/8
சூரிய பகவானின் அருள் பெற
வாழ்வில் உற்சாகம் பெருகி, தைரியம் அதிகமாகி, தலைமைத்துவ பண்புகள் மேலோங்க உதவும் சூரிய பகவானின் அருள் பெற தினமும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
8/8
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.