Venus Transit: நவம்பர் 6, தீபாவளிக்கு முன் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி ஜோதிட ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் தலைவிதியே மாறப்பொகும் 7 ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் காதல், திருமணம், அழகு, மகிழ்ச்சி, கலை மற்றும் பொருள் சார்ந்த சுகபோகங்களுக்கு காரக கிரகமாகக் கருதப்படுகிறார். சுக்கிரன் வெவ்வேறு ராசிகளில் சஞ்சரிக்கும்போது, அது தனிப்பட்ட உறவுகள், நிதி நிலை, நல்வாழ்வு ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 நவம்பர் 6 அன்று, சுக்கிரன் கன்னி ராசிக்குள் பெயர்ச்சியாகிறார். சுக்கிரப் பெயர்ச்சி தீபாவளிக்கு முன் நடக்கும் முக்கிய ஜோதிட நிகழ்வாக இருக்கும்.
1/9
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்
நவம்பர் 6 அன்று சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் இது பொற்காலமாய் ஜொலிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
2/9
ரிஷபம்
ரிஷப ராசிக்கு சுக்கிரனே அதிபதியாவார். ஆகையால், இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மைகளை அளிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைத்தியும் இருக்கும். மாணவர்கள் தங்கள் விடாமுயற்சியின் மூலம் கல்வியில் சிறந்து விளங்க வாய்ப்புகள் அமையும். கலை அல்லது படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள், பழைய திட்டங்களை மீண்டும் பரிசீலிக்கலாம் அல்லது புதிய யோசனைகளை உருவாக்கலாம். சுக்கிரன் வக்ர கதியில் இருப்பதால், உணர்வுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதிலோ அல்லது அபாயகரமான முதலீடுகளைச் செய்வதிலோ அவசரப்படாமல் இருப்பது நல்லது.
3/9
மிதுனம்
மிதுன ராசியினருக்கு, சுக்கிரன் பெயர்ச்சி சிறந்த பலன்களை அளிக்கும். சுக்கிரன் அருளால் இல்லற மகிழ்ச்சியை மேம்படும், குடும்ப உறவுகள் வலுவடையும். உங்கள் வீட்டில் பழுதுபார்ப்பு அல்லது புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள இது சரியான நேரமாக இருக்கும். சிலருக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கக்கூடும். சொத்து தொடர்பான விவகாரங்கள் முன்னேற்றமடையக்கூடும். ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், அனைத்து ஆவணங்களையும் முழுமையாகச் சரிபார்ப்பது நல்லது.
4/9
கடகம்
கடக ராசியினருக்கு, சுக்கிரன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நன்மை நடக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஊடகம், எழுத்து, சந்தைப்படுத்தல் (மார்க்கெட்டிங்) அல்லது தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு, இந்த காலம் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவும் அல்லது மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடனான உறவு மேம்படலாம். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
5/9
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். பண வரவு அதிகமாகும். அலுவலக பணிகளில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, செலவுக்கும் சேமிப்புக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவதில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும்.
6/9
துலாம்
துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஆகையால், சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உணர்வுபூர்வமான புரிதல் மற்றும் கவனமான உரையாடல்கள் மூலம் உறவுகள் மேம்படும். உங்கள் செலவுகளைக் கண்காணிப்பில் வைத்திருங்கள். தற்போது சுக்கிரன் வக்ர கதியில் (பின்னோக்கிய இயக்கத்தில்) இருப்பதால், புதிய பொறுப்புகளை ஏற்கும் முன் ஏற்கனவே உள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.
7/9
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு, சுக்கிரன் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். வருமானம், லாபம், நட்பு மற்றும் வியாபாரத்தில் நன்மை கிடைக்கும். முக்கியமான தொழில்முறைத் தொடர்புகளுடன் மீண்டும் இணையலாம் அல்லது ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு திட்டத்தைத் மீண்டும் தொடங்கலாம். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முன்னர் செய்த முதலீடுகளால் லாபம் உண்டாகும்.
8/9
மகரம்
கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். உயர்கல்வி, நீண்ட தூரப் பயணம், ஆன்மீகம் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுதல் போன்ற விஷயங்களினால் நன்மை உண்டாகும். அலுவலக் பணிகளில் உள்ளவர்கள் மற்றவர்களின் ஆலோசனை அல்லது வழிகாட்டுதலின் மூலம் பயனடையலாம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவோ ஆர்வம் அதிகரிக்கும்.
9/9
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.