• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /செவ்வாய் - குரு - கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் குவியும்

செவ்வாய் - குரு - கேது சேர்க்கை: டிசம்பர் 5 வரை இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் குவியும்

Written BySudharsan G
Published: Nov 20, 2026, 14:17 IST|Updated: Nov 20, 2026, 14:21 IST
joinshare
சிம்ம ராசியில் தற்போது மூன்று கிரகங்கள் வீற்றிருக்கின்றன. செவ்வாய் - குரு - கேது சேர்க்கையால் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வரை மூன்று ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகள் குவியும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

சிம்ம ராசி என்பது சூரிய பகவானுக்கு உகந்த ராசியாகும். கேது பகவான் அசுபமானதாக கருதப்படுகிறது. தற்போது சிம்ம ராசியில் செவ்வாய் - குரு - கேது சேர்க்கையால் திரிகிரகி யோகம் உருவாகி உள்ளது. வரும் டிசம்பர் 5ஆம் தேதி கேது பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் அந்த யோகம் கலையும்.

 

Sevvai Guru Ketu Conjunction1/6

சிம்ம ராசியில் 3 கிரகங்கள்

சூரிய பகவானுக்கு உகந்த சிம்ம ராசியில் தற்போது பல்வேறு கிரகங்கள் வீற்றிருக்கின்றன. கடந்த நவம்பர் 12ஆம் தேதி செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். கேது மற்றும் குரு பகவான் ஏற்கெனவே சிம்ம ராசியில் உள்ளனர். அந்த வகையில், வரும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று அரிய நிகழ்வு ஒன்று நடப்பதாக ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sevvai Guru Ketu Conjunction2/6

திரிகிரகி யோகம் கலையும்

வரும் டிசம்பர் 5ஆம் தேதி அன்று கேது சிம்மத்தில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால், அரிய திரிகிரகி யோகம் கலையும். இருப்பினும் செவ்வாய் - குரு - கேது சேர்க்கை டிசம்பர் 5ஆம் தேதிவரை மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அளிக்கும். அந்த ராசிகளை இங்கு காணலாம்.
Sevvai Guru Ketu Conjunction3/6

கடக ராசிக்காரர்கள் கவனத்திற்கு

கடக ராசிக்கு 2ஆம் வீட்டில் செவ்வாய், கேது, குரு இணைவதால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதிய பணவரவு கிடைக்கலாம். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். பேச்சாற்றல் மூலம் முக்கியப் பணிகளை முடிப்பீர்கள்.
Sevvai Guru Ketu Conjunction4/6

துலாம் ராசிக்காரர்கள் கவனத்திற்கு

துலாம் ராசிக்கு 11ஆம் வீட்டில் குரு, செவ்வாய், கேது இணைவதால் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பணவரவு, பதவி உயர்வு கிடைக்கலாம். புதிய பொறுப்புகள், தொழில் வாய்ப்புகள் உருவாகும். திட்டங்கள் லாபம் தரலாம்.
Sevvai Guru Ketu Conjunction5/6

விருச்சிக ராசிக்காரர்கள் கவனத்திற்கு...

விருச்சிக ராசிக்கு 10ஆம் வீட்டில் செவ்வாய், கேது, குரு இணைவதால் வேலை, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பெரிய ஆர்டர்கள், லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். மாணவர்களின் முயற்சிகள் வெற்றி தரும்.
Sevvai Guru Ketu Conjunction6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.