• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் கிடைக்காதா? புதிய e-RUPI வவுச்சர் முறை Explained

ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் கிடைக்காதா? புதிய e-RUPI வவுச்சர் முறை Explained

Written ByShiva Murugesan
Published: Nov 13, 2026, 03:21 PM IST|Updated: Nov 13, 2026, 03:27 PM IST
joinshare
பொது விநியோகத் திட்டத்தில் ஊழலைத் தடுக்க மத்திய அரசு புதிய 'ஈ-ருப்பி' (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காதா? பணமாக வழங்கப்படுமா? இந்தப் புதிய QR கோடு வவுச்சர் முறை எப்படிச் செயல்படும் என்பது குறித்த முழுமையான விளக்கத்தை இங்கே காணலாம்.

மத்திய அரசு ரேஷன் விநியோகத்தில் உள்ள முறைகேடுகளைத் தடுக்க எஸ்பிஐ வங்கி உதவியுடன் ஆதார் இணைக்கப்பட்ட 'ஈ-ருப்பி' டிஜிட்டல் வவுச்சர் முறையைக் கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்குப் பணமாக வழங்கப்படாமல், அந்தந்த மாதத்திற்கான அரிசி, கோதுமை போன்ற பொருட்களின் அளவு கொண்ட QR கோடு வவுச்சர் அனுப்பப்படும். ரேஷன் கடைகளில் இந்த QR கோடை ஸ்கேன் செய்து, OTP மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்புக்குப் பிறகு பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், ரேஷன் கடைகளை மூடும் நோக்கத்தில் கொண்டுவரப்படவில்லை என அரசு விளக்கமளித்துள்ளது.

Will goods no longer be available at ration shops?1/10

ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் கிடைக்காதா? மக்களிடம் எழுந்துள்ள குழப்பம்!

ரேஷன் கார்டு வச்சிருக்கவங்க எல்லாருக்கும் திடீர்னு ஒரு கேள்வி மனசுல ஓடியிருக்கும். "இனிமே ரேஷன் கடைகள்ல அரிசி, கோதுமை மாதிரி மானிய விலைப் பொருட்கள் கிடைக்காதா? எல்லாமே டிஜிட்டல் முறைக்கு மாறிடுமா?" அப்படின்னு. உண்மைல என்ன நடக்குதுன்னா, ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிப்பாட்டப்படல; மாறாக, அதை வாங்குற முறைலதான் செம மாற்றங்களைக் கொண்டு வரப் போகுது மத்திய அரசு. அதைப் பத்திதான் இந்த போட்டோ கேலரில தெளிவாப் பார்க்கப் போறோம்.
Why is the new e-voucher system being introduced?2/10

புதிய ஈ-வவுச்சர் (E-Voucher) முறை எதற்காக கொண்டுவரப்படுகிறது?

நம்ம ஊருல பொது விநியோகத் திட்டத்துல எவ்வளவோ மாற்றங்கள் கொண்டு வந்தாலும், அங்கங்க ஊழலும் முறைகேடுகளும் நடக்குறது தவிர்க்க முடியாத ஒன்றாவே இருக்கு. அரசாங்கம் கொடுக்கிற பொருட்கள் யாருக்குப் போய் சேரணுமோ அவங்களுக்கு 100% கரெக்டா போய் சேருதான்னா அதுல பல கேள்விகள் இருக்கு. இந்தத் தில்லுமுல்லுகளையும் முறைகேடுகளையும் ஒட்டுமொத்தமா ஒழிக்கணும்ங்கிறதுக்காகத்தான் இந்த டிஜிட்டல் மானிட்டரி வவுச்சர், குறிப்பா 'ஈ-ருப்பி' (e-RUPI) டெக்னாலஜியை களத்துல இறக்கப் போறாங்க.
How does an e-voucher work? Very simple steps3/10

ஈ-வவுச்சர் எப்படி வேலை செய்யும்? ரொம்ப சிம்பிள் ஸ்டெப்ஸ்!

'ஐயோ, இதெல்லாம் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருக்குமே'னு நீங்க நினைக்கத் தேவையில்லை. ரொம்ப சிம்பிள்ங்க! உங்க வீட்டுக்கு ஒரு மாசத்துக்கு எவ்வளவு ரேஷன் பொருட்கள் (உதாரணத்துக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை) ஒதுக்கப்பட்டு இருக்கோ, அதுக்குத் தகுந்த மாதிரி எஸ்பிஐ (SBI) வங்கி மூலமா டிஜிட்டல் ஈ-ருப்பி வவுச்சர் ஒன்னு ஜெனரேட் ஆகும். அது உங்க ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அல்லது கியூஆர் (QR) கோடா வந்துரும். அப்படி இல்லன்னா 'மேரா ரேஷன்' (Mera Ration) ஆப் மூலமாவும் நீங்க ஈஸியா செக் பண்ணிக்கலாம்.
How do you purchase goods at a fair-price shop?4/10

நியாயவிலைக் கடையில் பொருட்கள் வாங்குவது எப்படி?

வவுச்சர் வந்தாச்சு, அடுத்து கடைக்குப் போனா என்ன பண்ணனும்? நேரா உங்க ஊருல இருக்கிற நியாயவிலைக் கடைக்கு (Fair Price Shop) போயி டீலர் கிட்ட அந்த கியூஆர் கோடைக் காட்டணும். அவங்க அதை ஸ்கேன் பண்ணதும், உங்களுக்கு என்னென்ன பொருட்கள் வரணும்னு ஸ்கிரீன்ல காட்டும். உடனே உங்க மொபைலுக்கு ஒரு ஓடிபி (OTP) வரும். அதைச் சொன்னதும் அடுத்த கட்டமா உங்களோட பயோமெட்ரிக் (Biometric) கைரேகை சரிபார்ப்பு நடக்கும். இது எல்லாமே சக்சஸ் ஆனதும் உங்களுக்கான ரேஷன் பொருட்களை நீங்க தாராளமா வாங்கிக்கலாம்.
Is an e-voucher cash or a product?5/10

ஈ-வவுச்சர் பணமா? பொருளா? இதைப் புரிஞ்சுக்கோங்க!

'ஈ-வவுச்சர்'னு சொன்ன உடனே, 'ஓ... நமக்கு ₹500, ₹1000-னு பணமா அக்கவுண்டுக்கு வந்துரும் போல'னு நீங்க நினைச்சுடாதீங்க. இது பணமே கிடையாது! அந்த வவுச்சர்ல என்ன பொருள் (உதாரணத்துக்கு 10 கிலோ அரிசி அல்லது கோதுமை) மென்ஷன் பண்ணிருக்கோமோ, அந்தப் பொருள் மட்டும்தான் கிடைக்கும். இந்த வவுச்சரை வச்சு எந்தக் காரணத்தைக் கொண்டும் பணத்தைப் பெற முடியாது. கடையில பொருட்களாக மட்டும்தான் வாங்க முடியும், இந்த விஷயத்துல தெளிவா இருக்கணும்.
Do the vouchers change every month? Do they expire?6/10

மாசம் மாசம் வவுச்சர் மாறுமா? காலாவதி ஆகுமா?

ரொம்ப முக்கியமான விஷயம் இதுதான்! ஒவ்வொரு மாதமும் உங்களுக்கான புதிய ஈ-வவுச்சர் ஜெனரேட் ஆகும். அதை வச்சு அந்த மாதத்துக்குரிய பொருட்களை நீங்க வாங்கிக்கலாம். ஒருவேளை நீங்க இந்த மாசம் ரேஷன் பொருட்கள் எதையுமே வாங்கல அப்படின்னா, இந்த மாசத்துக்கான வவுச்சர் தானா டீ-ஆக்டிவேட் (Deactivate) ஆயிடும். அடுத்து அடுத்த மாசத்துக்கான புது வவுச்சர் வந்துரும். போன மாசத்து வவுச்சரை அடுத்த மாசம் சேர்த்து வச்சு யூஸ் பண்ண முடியாது.
Why this e-voucher system instead of direct cash payments?7/10

நேரடியா பணம் கொடுக்காமல் ஏன் இந்த ஈ-வவுச்சர் முறை?

'அதுக்குப் பதிலா நேரா வங்கி கணக்குல பணத்தையே போட்டுக் கொடுத்திடலாமே'னு ஒரு கேள்வி வரலாம். ஆனா, 2025-ல சத்தீஸ்கர், புதுச்சேரி மாதிரி சில இடங்கள்ல இந்த மாதிரி நேரடி பணப் பரிமாற்றம் (Cash Transfer) ட்ரையல் பார்த்தாங்க. ஆனா அது செம லியூல முடிந்தத. பணத்தைக் கொடுத்தா அது மளிகை சாமானுக்குப் போறதை விட்டுட்டு, குடிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ வீட்ல இருக்கவங்க செலவழிச்சிட்டாங்க. அதுமட்டுமில்லாம பிரைவேட் மார்க்கெட் விலைக்கு ரேஷன் பணமும் போதவில்லை. அதனாலதான் பணத்தைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் பொருட்களாகவே தர முடிவு செஞ்சாங்க.
In which states is this already in practice?8/10

ஏற்கனவே எந்தெந்த மாநிலங்களில் இது நடைமுறையில் இருக்கு?

'இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமா?'ன்னு கேட்டீங்கன்னா, ஆல்ரெடி ஒர்க் அவுட் ஆயிட்டு இருக்குங்க! குஜராத் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள்ல இந்த ஈ-வவுச்சர் முறை இப்போதே வெற்றிகரமாக நடைமுறையில இருக்கு. அங்க இருக்க மக்கள் இந்த முறையிலதான் நியாயவிலைக் கடைகள்ல பொருட்களை வாங்கிட்டு வராங்க. ட்ரையல் பேசிஸ்ல சக்சஸ் ஆனதுனாலதான், அடுத்தக்கட்டமா இத இந்தியாவோட மத்த மாநிலங்களுக்கும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருது.
Why are ration shop workers protesting?9/10

ரேஷன் கடைக்காரர் ஏன் போராட்டம் பண்றாங்க? அரசின் விளக்கம் என்ன?

புதிய சிஸ்டம் வருதுன்னு சொன்னதும், நாடு முழுவதும் இருக்கிற ரேஷன் கடை சங்கங்கள் 'இதை கொண்டு வந்தா எங்க கடைங்கள மூட வேண்டியதுதான்'னு சொல்லி போராட்டம் பண்ண ஆரம்பிச்சாங்க. ஆனா, அரசாங்கம் தரப்புல தெளிவான விளக்கம் கொடுத்தாங்க. அதாவது, "நாங்கள் நியாயவிலைக் கடைகளை மூடச் சொல்லவில்லை; கடைகள் வழியாத்தான் பொருட்கள் வழங்கப்படும். அந்த விநியோக முறை மட்டும்தான் டிஜிட்டல் ஆகுது”னு உறுதியளிச்சாங்க. யாருக்குப் பொருள் போய்ச் சேரணுமோ அவங்களுக்குத் துளியும் ஊழல் இல்லாம போய் சேரணும்ங்கிறதுதான் இதன் ஒரே நோக்கம்.
Disclaimer10/10

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொது விநியோகத் திட்டம் (PDS) மற்றும் மத்திய அரசின் புதிய 'ஈ-ருப்பி' (e-RUPI) டிஜிட்டல் வவுச்சர் திட்டம் தொடர்பான தற்போதைய அறிவிப்புகள் மற்றும் சோதனை முயற்சிகளின் அடிப்படையில் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதமும், விதிமுறைகளும் மாறுபடலாம். எனவே, ரேஷன் பொருட்கள் மற்றும் புதிய வவுச்சர் முறை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு உங்கள் மாநிலத்தின் உணவுப் பொருள் வழங்கல் துறை (Civil Supplies Department) அல்லது அருகிலுள்ள நியாயவிலைக் கடையைத் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
TAGS:
Ration Card

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.