• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /புரட்டாசி கடைசி சனி: 12 ராசிகளுக்கான பலன்கள் - இன்று யார் யாருக்கு அனுகூலமான நாள்...?

புரட்டாசி கடைசி சனி: 12 ராசிகளுக்கான பலன்கள் - இன்று யார் யாருக்கு அனுகூலமான நாள்...?

Written BySudharsan G
Published: Oct 17, 2026, 05:56 AM IST|Updated: Oct 17, 2026, 06:07 AM IST
joinshare
October 17 Rasipalan: புரட்டாசி மாதம் 30ஆம் நாளான இன்று (அக்டோபர் 17), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

October 17, Today Horoscope: இன்று புரட்டாசி 30ஆம் நாள் சனிக்கிழமை (அக்டோபர் 17) பரபாவ வருடம்.

October 17 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
October 17 Rasipalan2/13

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். பூமி விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியாக சுபச்செய்திகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் அஸ்வினி : அலைச்சல் அதிகரிக்கும். பரணி : அனுசரித்து செல்லவும். கிருத்திகை : சுபமான நாள்.
October 17 Rasipalan3/13

ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு விமர்சனப் பேச்சுகள் வரக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம் கிருத்திகை : செலவுகள் அதிகரிக்கும். ரோகிணி : விட்டுக்கொடுத்து செயல்படவும். மிருகசீரிஷம் : வாய்ப்பு உண்டாகும்.
October 17 Rasipalan4/13

மிதுன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

இலக்கிய பணிகளில் கற்பனை வளம் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : கற்பனை மேம்படும். திருவாதிரை : எண்ணம் ஈடேறும். புனர்பூசம் : ஆதரவான நாள்.
October 17 Rasipalan5/13

கடக ராசிக்காரர்களுக்கான பலன்கள்

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சொத்து வழக்குகளில் அனுகூலமான முடிவுகள் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். நினைத்த காரியம் நிறைவேறும். உயரதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் புனர்பூசம் : அனுகூலமான நாள். பூசம் : சிந்தனைகள் மேம்படும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
October 17 Rasipalan6/13

சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சிந்தித்து செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். நட்பால் ஆதாயம் ஏற்படும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் தேடி வருவார்கள். பெற்றோர் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பொழுது போக்கு செயல்களில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் மகம் : ஆதாயகரமான நாள். பூரம் : வேறுபாடுகள் மறையும். உத்திரம் : அறிமுகம் ஏற்படும்.
October 17 Rasipalan7/13

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுற்றி இருப்பவர்களைப் பற்றி புரிந்துகொள்வீர்கள். அதிரடியாக ஒரு முடிவை எடுப்பீர்கள். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனை விற்பனையில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் நண்பர்கள் வழியில் கிடைக்கும். வியாபார விரிவாக்க முயற்சிகளில் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திரம் : தேவைகள் நிறைவேறும். அஸ்தம் : முன்னேற்றமான நாள். சித்திரை : பொறுமை வேண்டும்.
October 17 Rasipalan8/13

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிந்தனை திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் சித்திரை : நம்பிக்கை மேம்படும். சுவாதி : புதுமையான நாள். விசாகம் : மாற்றம் ஏற்படும்.
October 17 Rasipalan9/13

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றம் உண்டாகும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் புதிய அனுபவம் ஏற்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டத்தில் செல்வாக்கு மேம்படும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : புரிதல்கள் உண்டாகும். அனுஷம் : அனுபவம் ஏற்படும். கேட்டை : செல்வாக்கு மேம்படும்.
October 17 Rasipalan10/13

தனுசு ராசிக்காரர்களுக்கான பலன்கள்

எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்களை மேற்கொள்வது மேன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கியமான கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : பொறுமையுடன் செயல்படவும். பூராடம் : மேன்மையான நாள். உத்திராடம் : கவனம் வேண்டும்.
October 17 Rasipalan11/13

மகர ராசிக்காரர்களுக்கான பலன்கள்

ஆடம்பரமான பொருள்களின் மீது விருப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியம் நிமித்தமான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் உத்திராடம் : மாற்றம் உண்டாகும். திருவோணம் : கவனம் வேண்டும். அவிட்டம் : தெளிவுகள் ஏற்படும்.
October 17 Rasipalan12/13

கும்ப ராசிக்காரர்களுக்கான பலன்கள்

மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் அவிட்டம் : தன்னம்பிக்கை பிறக்கும். சதயம் : ஈடுபாடு உண்டாகும். பூரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
October 17 Rasipalan13/13

மீன ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சமூக பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். வியாபார சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம் பூரட்டாதி : புதுமையான நாள். உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும். ரேவதி : மாற்றமான நாள்.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில்  17 பேர் பலி! என்ன நடந்தது?

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

2

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

3

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

4

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

5

Explained: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயம்.. 6 நாட்களாக தேடும் போலீஸ்.. என்ன நடக்கிறது?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.