• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ரூ.4,000 கோடி வசூலித்த Obsession படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

ரூ.4,000 கோடி வசூலித்த Obsession படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Oct 16, 2026, 05:45 PM IST|Updated: Oct 16, 2026, 05:55 PM IST
joinshare
ஆங்கிலத்தில் வெளியாகி, பெரு வெற்றி பெற்ற Obsession திரைப்படம், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ரூ.4000 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த திரைப்படத்தை எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?

மிக சிறிய பட்ஜெட்டில் உருவாகி, மக்களை கவர்ந்த திரைப்படம், Obsession. இந்த திரைப்படம் உலகளவில் ரூ.4000 கோடி வரை வசூலித்திருந்தது. இப்படம் வெளியாகி பல மாதங்கள் கடந்திருந்தாலும், இப்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

Obsession Movie1/5

Obsession திரைப்படம்

Curry Barker இயக்கத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் திரைப்படம்தான், Obsession. இந்த படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டர்ன் மற்றும் இண்டி நவரேட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படம் ஹாரர் படம் என்பதை தாண்டி, டாக்ஸிக் உறவுகளை பற்றிய படமாகவும் இருந்தது.
Obsession Movie Story2/5

Obsession படத்தின் கதை

Obsession திரைப்படத்தின் கதையை பொறுத்தவரை, ஒரு இளைஞன் தான் விரும்பும் ஒரு பெண், இந்த உலகை பிறரை விடவும் அதிகமாக தன்னை நேசிக்க வேண்டும் என்று One Wish Willow-வை உடைக்கிறான். அவன் ஆசை நிறைவேறுகிறது. ஆனால், அதுவே அவனுக்கு விணையாகவும் முடிகிறது.
Obsession Theatrical Release Date3/5

Obsession தியேட்டர் ரிலீஸ் தேதி

Obsession திரைப்படம், கடந்த மே மாதம் 15ஆம் தேதி அமெரிக்க தியேட்டர்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் இந்த படத்தின் காட்சிகள் நீட்டிக்கப்பட்டன. இதற்கு அதிக ஸ்கிரீன்கள் வழங்கப்பட்டன. இந்த படத்திற்கு உலகளவில் பல தரப்பினர் ஆதரவு கொடுத்தனர்.
Obsession Uncut Version OTT Release date4/5

Obsession நீக்கப்படாத காட்சிகளுடன் ஓடிடியில் ரிலீஸ்

இப்படம், முன்னரே அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியிடப்படாலும் இதற்கு தனியாக ரெண்ட் முறையில் சந்தா செலுத்தி பார்க்க வேண்டியதாய் இருந்தது. தற்போது இந்தியாவில் இந்த படம் வேறு ஒரு ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.
JIO Hotstar OTT Release5/5

ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம்

சுமார் ரூ.4000 கோடி வரை வசூலித்த obsession திரைப்படத்தின் uncut version-ஐ அக்டோபர் 30ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TAGS:
Hollywood

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.