• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /கந்த சஷ்டி 2026: 6 நாட்களும் எளிய முறையில் விரதம்.. எப்படி இருக்கலாம்? பூஜை நேரமும், வழிபாடு முறைகளும்!

கந்த சஷ்டி 2026: 6 நாட்களும் எளிய முறையில் விரதம்.. எப்படி இருக்கலாம்? பூஜை நேரமும், வழிபாடு முறைகளும்!

Written ByUmabarkavi K
Published: Nov 09, 2026, 03:32 PM IST|Updated: Nov 09, 2026, 03:41 PM IST
joinshare
Kandha Sashti Viratham: கந்த சஷ்டி விரதம் நாளை (நவம்பர் 10) தொடங்கப்பட உள்ள நிலையில், 6 நாட்கள் எப்படி விரதம் இருக்கலாம், பூஜை முறைகள், நேரம் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Kandha Sashti Viratham:  தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
 

kandha sasti viratham1/5

நாளை துவங்குகிறது கந்த சஷ்டி விழா

முருகப்பெருமான், சூரனை வென்ற நிகழ்வை ஆண்டுதோறும் கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டு கந்த சஷ்டி விரதம் நாளை (நவம்பர் 10) துவங்கி, தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. நாளை கந்த சஷ்டி விரதம் தொடங்க உள்ள நிலையில், எப்படி விரதம் இருக்கலாம், வழிபாடு நேரம் குறித்த விவரத்தை பார்ப்போம்.
kandha sasti viratham2/5

கந்த சஷ்டி விரதம் எப்படி இருக்கலாம்?

முருகப்பெருமானுக்காக கந்த சஷ்டி விரதம் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப பல முறைகளில் விரதம் இருக்கலாம். முழு விரதமாக பழம், பால், தண்ணீர், மிளகு, உப்பு காரம் இல்லாத உணவு, சாதம் இல்லாத உணவு, ஒரு வேளை உணவு ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையும் நீங்கள் கடைபிடித்து விரதம் இருக்கலாம்.
kandha sasti viratham3/5

கந்த சஷ்டி விரதம், பூஜை முறைகளும்

6 நாட்களுக்கு விரதம் இருக்கும், முருகனை முறையாக வழிபடுவது சிறந்தது. 6 நாட்களும் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து, காலை 6 முதல் 7 மணிக்குள் விரதத்தை தொடங்கவும். பிறகு, பூஜை அறையில் விளக்கு ஏற்றவும். பிறகு, முருகனை அலங்கரித்து, மலரால் அர்ச்சனை செய்யவும். பிறகு, வேல் இருந்தால், அதற்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்ய வேண்டும். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல்/வாழைப்பழம், தேங்காய்/ பஞ்சாமிர்தம்/வெண் பொங்கல், ரவை கேசரி/அவல் பாயசம் ஆகியவற்றை வைத்து முருகனுக்கு படைக்கலாம். மாலை நேரத்திலும் 6.30 மணிக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
kandha sasti viratham4/5

கந்த சஷ்டி விரதத்தின்போது செய்யக்கூடியவை

பிறகு, ஆறாம் நாள் சூரசம்ஹாரத்திற்கு பிறகு ஒரு டம்ளர் பால் அருந்தி விரதம் முடிக்கலாம். அல்லது ஏழாம் நாள் திருக்கல்யாணத்தன்று பாரணை செய்யலாம். கந்த சஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் 7 நாட்களும் ஒரே விதமான விரத முறையத் தொடர்ந்து பின்பற்றுவது சிறப்பு. கந்த சஷ்டி விரதத்தின்போது, தினமும் முருகனை தவறாமல் வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். காலை, மாலை தீபம் ஏற்ற வேண்டும்.
kandha sasti viratham5/5

கந்த சஷ்டி விரதத்தின்போது தவிர்க்க வேண்டியவை

கந்த சஷ்டி விரதத்தின்போது 6 நாட்களும் அசைவ உணவு, முட்டை, கடுமையான கார உணவுகள், பேக்கரி, ஜங்க் ஃபுட், மது, புகையிலை போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது. விரதத்தின்போது, பழங்கள், பால், பேரிச்சை, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர் சாதம், சுண்டல், கஞ்சி சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Festival

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.