• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ரூ.1.57 லட்சம் மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை: எப்படி விண்ணப்பிப்பது?

ரூ.1.57 லட்சம் மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை: எப்படி விண்ணப்பிப்பது?

Written ByKarthikeyan Sekar
Published: Nov 11, 2026, 04:05 PM IST|Updated: Nov 11, 2026, 04:14 PM IST
joinshare
Country Chicken Farm Subsidy 2026 : ரூ.1.57 லட்சம் மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு. முழு விவரம்

Country Chicken Farm Subsidy 2026 : 50% அரசு மானியம், 250 கோழிக்குஞ்சுகள் இலவசம், விருப்பம் உள்ளவர்கள் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
 

tamil nadu country chicken subsidy 20261/6

நாட்டுக்கோழிப் பண்ணை திட்டம்

50% அரசு மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை திட்டம் - திருப்பூர் மாவட்டத்தில் 2026-27 நிதி ஆண்டில் கிராமப்புறங்களில் 250 கோழிகள் கொண்ட சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50% மானியம் (ரூ.1,57,000/-) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோழிக் கொட்டகை கட்டுமானச் செலவு மற்றும் கோழி வளரும் வரையிலான 4 மாத தீவனச் செலவு ஆகியவற்றிற்கான மொத்தத் தொகையில் 50 சதவீதத்தை மாநில அரசு மானியமாக வழங்கும். மீதமுள்ள 50% தொகையைப் பயனாளி தனது சொந்த முதலீடு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
tamil nadu country chicken subsidy 20262/6

250 கோழிக்குஞ்சுகள் முற்றிலும் இலவசம்

250 கோழிக்குஞ்சுகள் முற்றிலும் இலவசம் - இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளிக்கும் ஓசூர் மாவட்டக் கால்நடைப் பண்ணையிலிருந்து 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக்குஞ்சுகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். அதே சமயம், பண்ணைக்கான கட்டுமானப் பணிகள் மற்றும் தீவனம் வாங்குதல் போன்ற இதர அனைத்து நடைமுறைகளையும் பயனாளியே நேரடியாக முன்னின்று செய்ய வேண்டும்.
tamil nadu country chicken subsidy 20263/6

நிலம் மற்றும் இருப்பிடத்திற்கான தகுதிகள்

நிலம் மற்றும் இருப்பிடத்திற்கான தகுதிகள் - நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க விரும்பும் பயனாளியிடம் கோழிக் கொட்டகை கட்டுவதற்கு குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். மேலும், அந்த இடம் மனித குடியிருப்புகளிலிருந்து சற்று விலகி அமைந்திருக்க வேண்டும் என்பதும், விண்ணப்பிக்கும் பயனாளி சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாகும்.
tamil nadu country chicken subsidy 20264/6

யாருக்கெல்லாம் முன்னுரிமை

யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும்? - கிராமப்புற விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இத்திட்டத்தில் விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பப் பரிசீலனையின் போது அரசு சிறப்பு முன்னுரிமை வழங்கி வருகிறது.
tamil nadu country chicken subsidy 20265/6

முக்கிய நிபந்தனை

முக்கிய நிபந்தனைகளும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் - விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ கடந்த 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய மூன்று ஆண்டுகளில் அரசின் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்கக் கூடாது. விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல், 50% பங்களிப்புத் தொகைக்கான வங்கி இருப்பு அல்லது கடன் ஒப்புதல் விவரம், பண்ணையை 3 ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்கான உறுதிமொழி மற்றும் முந்தைய ஆண்டுகளில் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
tamil nadu country chicken subsidy 20266/6

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி? யாரைத் தொடர்பு கொள்வது? - நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வமும் தகுதியும் உள்ள திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்கள், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெறவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் தங்களுக்கு அருகாமையிலுள்ள அரசு கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி பயன்பெறலாம்.
TAGS:
TN Govt Schemes

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

2

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

3

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

4

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

5

என்விடியா CEO விவகாரத்தில் கிளம்பும் பூதம்: இரண்டாவது கள்ள உறவு, மகன்-மகளின் சம்பளம்... பறிபோகும் பதவி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.