பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை காலகட்டமான தற்போது, கோவை மாவட்டத்திற்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறையாகும். பள்ளிகள் வரும் அக்டோபர் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே வரும் அக்டோபர் 2ஆம் தேதி (வெள்ளி) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை என்பதால் தொடர் விடுமுறையும் கிடைக்கும். எனவே இதை பயன்படுத்தி சுற்றுலா செல்லலாம்.
1/5
கோவை குற்றாலம்
குளு குளு கோவை என பொதுவாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சுற்றிலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சிறுவாணி நீர்வீழ்ச்சி, கொடிவேரி அணை, மருதமலை கோவில், ஸ்ரீ பேரூர் பட்டீஸ்வரர் கோவில், கோவை ஈஷா மையம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் கோவை குற்றலாமும் ஒன்றாகும்.
2/5
கோவை குற்றாலம் எங்கு இருக்கிறது?
கோவை குற்றலாம் அருவி போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயல் பகுதியில் அமைந்துள்ளது. கோவை நகரில் இருந்து சுமார் 35 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த கோவை குற்றாலம் அருவிக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, பல ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
3/5
பருவமழை காலகட்டம்
தென்மேற்கு பருவமழைக் காலமான தற்போது, மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த நீர்வரத்து அதிகரித்து, அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4/5
கோவை குற்றாலத்தில் அனுமதி மறுப்பு
இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றால அருவியில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நீர் வரத்து குறைந்து, பாதுகாப்பாக மக்கள் நீராட சூழல் சீரடைந்து மறு அறிவிப்பு வரும்போது மீண்டும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
5/5
கோவை குற்றாலத்திற்கு அனுமதி
இந்நிலையில், நீர்வரத்து சீரானதால் கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. எனவே, காலாண்டு விடுமுறைக்கு குழந்தைகளை எங்கு அழைத்துச் செல்லலாம் என திட்டமிடும் பயணிகளுக்கு கோவை குற்றாலம் நல்ல ஆப்ஷனாகும்.