ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - காரைக்குடி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
சென்னை எழும்பூர் - காரைக்குடி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு இன்று காலை தொடங்கிவிட்ட நிலையில், இதன் அட்டவணை, பெட்டிகள், நின்று செல்லும் நிலையங்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.
1/5
விடுமுறை தின சிறப்பு ரயில்
இன்று முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர் விடுமுறை தினமாகும். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் தெற்கு ரயில்வே பல்வேறு சிறப்பு ரயில்வே சேவை அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை எழும்பூர் - காரைக்குடி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அதன் X தளத்தில் பதிவிட்டுள்ளது.
2/5
சென்னை எழும்பூர் - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (அக். 18 - ஞாயிறு) நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 06037), காலை 11.45 மணிக்கு காரைக்குடி சென்றடையும்.
3/5
காரைக்குடி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில்
காரைக்குடியில் இருந்து அக். 20ஆம் தேதி (செவ்வாய்) இரவு 10 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் (எண்: 06038) அடுத்த நாள் (அக். 21) காலை 8 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
4/5
எங்கெல்லாம் நின்று செல்லும்?
சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையே தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
5/5
மொத்த ரயில் பெட்டிகள்
4 படுக்கை அறை பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இந்த ரயில்களில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்களின் முன்பதிவு இன்று (அக். 17) காலை 8 மணிக்கு தொடங்கியது.