• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்: முழு விவரம்

ECL Finance latest news : பாம் டெவலப்பர்ஸ் திவால் வழக்கில் இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்தைக் கடன்கொடுத்தோர் குழுவிலிருந்து (CoC) நீக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 06, 2026, 09:49 AM IST|Updated: Nov 06, 2026, 09:51 AM IST
joinshare
இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த செக்:  முழு விவரம்
Image Credit: ECL Finance Supreme Court

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சந்தை சரிவில் பங்குகளை வாங்கலாமா? Buy the Dip முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

சந்தை சரிவில் பங்குகளை வாங்கலாமா? Buy the Dip முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!

2

அக்னிபத் திட்டத்தில் சேரும் அக்னிவீரர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடியாதா? என்ன காரணம்?

3

தந்தேராஸ் நாளில் உருவாகும் இரட்டை ராஜயோகம்.. இந்த 5 ராசிகளுக்கு பணமழை!

4

வெற்றி வீடு திட்டம்: 70,000 குடும்பங்களுக்கு இலவச வீடு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? CM விஜய் அறிவிப்பு

5

Explainer | கிரீன் பட்டாசு என்றால் என்ன? Green Crackers பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கிய உண்மைகள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ECL Finance latest news : பாம் டெவலப்பர்ஸ் திவால் வழக்கில் இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்தைக் கடன்கொடுத்தோர் குழுவிலிருந்து (CoC) நீக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடன் கொடுத்ததுடன் நின்றுவிடாமல், நிறுவனத்தின் நிர்வாகக் குழு மற்றும் நிதி முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதால், அந்நிறுவனத்தை ஒரு ‘தொடர்புடைய தரப்பாகவே’ (Related Party) கருத முடியும் என நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடனாளியின் நிர்வாக விவகாரங்களிலும் கொள்கை முடிவுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தை, வெறும் வெளிக்கடன் நிறுவனமாக (Outside Creditor) மட்டுமே கருத முடியாது; அது ஒரு Related Party ஆகவே கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் பாம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் திவால் நடவடிக்கையில், இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்தைக் கடன்கொடுத்தோர் குழுவிலிருந்து நீக்கிய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு:

திவால் மற்றும் திவால் நிலை குறியீடு சட்டப் பிரிவுகளின் கீழ், ஒரு நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கடன்கொடுத்தோர் குழுவில் கடன் கொடுத்தவர்கள் மட்டுமே இருக்க முடியும், ஆனால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் பங்களிக்கும் Related Parties இதில் இடம்பெற முடியாது.

பாம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இசிஎல் பைனான்ஸின் தலையீடு வெறும் கடனை வசூலிப்பதோடு நின்றுவிடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது:

இயக்குநர்களை நியமிக்கும் அதிகாரம்: பாம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இயக்குநர்களை நேரடியாக நியமிக்கும் உரிமையை இசிஎல் பைனான்ஸ் பெற்றிருந்தது.

முடிவெடுக்கும் அதிகாரம் : நிர்வாகக் குழுவில் எழும் முட்டுக்கட்டையான சூழ்நிலைகளில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இசிஎல் வசம் இருந்தது.

நிதி மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடு: நிறுவனத்தின் காலாண்டு வரவு-செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மற்றும் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை நேரடியாகக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டது.

நிர்வாக மாற்றங்களுக்குத் தடை: முக்கிய உயர் நிர்வாக அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்குவதைத் தடுக்கும் வீட்டோ  அதிகாரத்தையும் இசிஎல் பைனான்ஸ் கொண்டிருந்தது.

இத்தகைய ஆழ்ந்த கட்டுப்பாடுகள் ஒரு கடன் வழங்குநருக்குரிய எல்லையைத் தாண்டி, நிறுவனத்தின் கொள்கை வகுப்பில் நேரடியாகப் பங்குபெறும் Insider மாற்றிவிட்டதால், அந்நிறுவனத்தைக் கடன்கொடுத்தோர் குழுவில் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தது.

பரிவர்த்தனைகளின் ஆரம்பம்: ரூ.200 கோடிக்கு மேற்பட்ட முதலீடுகளும் உத்தரவாதங்களும்

இந்த வழக்கின் மூலக்கதை 2016-ஆம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் உருவான ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தில் தொடங்குகிறது:

2016 கடன்பத்திர முதலீடு: சாஹா இன்ஃப்ராடெக் (Saha Infratech) நிறுவனம் 'ப்ராஜெக்ட் என்கோர்' என்ற பெயரில் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக ரூ.160 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் வெளியிடத் திட்டமிடப்பட்டு, அதில் ரூ.110 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்த ரூ.110 கோடி மதிப்பிலான பத்திரங்கள் அனைத்தையும் இசிஎல் பைனான்ஸ் வாங்கியது. இந்த ஒப்பந்தத்திற்குப் பாம் டெவலப்பர்ஸ் கார்ப்பரேட் உத்தரவாதம் அளித்தது.

2017 கூடுதல் கடன்: அடுத்த ஆண்டே (2017), சாஹா இன்ஃப்ராடெக் நிறுவனத்திற்கு இசிஎல் பைனான்ஸ் மேலும் ரூ.90 கோடி கடன் வசதியை வழங்கியது. இதற்கும் பாம் டெவலப்பர்ஸ் நிறுவனமே உத்தரவாததாரராகச் செயல்பட்டது.

சாஹா இன்ஃப்ராடெக் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், அந்த மொத்தப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய கட்டாயத்திற்குப் பாம் டெவலப்பர்ஸ் தள்ளப்பட்டது.

தடயவியல் தணிக்கையில் அம்பலமான நிதி திசைதிருப்பல்

உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களை வெளிக்கொண்டு வந்தது.

சாஹா இன்ஃப்ராடெக் நிறுவனத்தின் கார்ப்பரேட் உத்தரவாததாரரான பாம் டெவலப்பர்ஸ், நிதியை வேறு நிறுவனங்களுக்குத் திசைதிருப்பும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சாஹா இன்ஃப்ராடெக் நிறுவனத்திலிருந்து பாம் டெவலப்பர்ஸ் வழியாக மற்ற இரு நிறுவனங்களுக்கு நிதிகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்த இரு நிறுவனங்களும் பாம் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களால் தொடங்கப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவ்விரு நிறுவனங்களின் மீதும் இசிஎல் பைனான்ஸ் நிறுவனமே முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தது தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

ரூ.270 கோடி நிலுவைத் தொகையும் CoC குழுவில் ஏற்பட்ட சிக்கலும்

2020-ஆம் ஆண்டில் பாம் டெவலப்பர்ஸ் நிறுவனம் திவால் நிலையை எட்டியது. அப்போது, இசிஎல் பைனான்ஸ் மற்றும் அதன் கடன் பத்திர அறங்காவலர் இணைந்து சுமார் ரூ.270 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையைக் கோரினர். மேலும், நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் மிக முக்கிய அமைப்பான கடன்கொடுத்தோர் குழுவில் தங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

திவால் சட்டத்தின்படி, நிறுவனத்துடன் நேரடி/மறைமுகத் தொடர்புகொண்ட எந்தவொரு நிறுவனமும் CoC-யில் இடம்பெறக் கூடாது என்ற விதி இசிஎல் பைனான்ஸுக்கு எதிராக நின்றது. NCLT ஏற்கனவே இசிஎல்-ஐ CoC-யில் சேர்க்க மறுத்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்திருப்பது இசிஎல் பைனான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சட்ட ரீதியான பின்னடைவாக அமைந்துள்ளது.

இசிஎல் பைனான்ஸுக்கு தொடரும் நெருக்கடிகள்

இசிஎல் பைனான்ஸ் நிறுவனம் நிர்வாக ரீதியான மற்றும் ஒழுங்குமுறை அழுத்தங்களைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. முன்னதாக, 2024 மே மாதத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இசிஎல் பைனான்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனமான எடெல்வீஸ் ஏஆர்சி (Edelweiss ARC) மீது தீவிர வணிகக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கடன் வழங்கல் நடைமுறைகளில் தீவிர முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு, கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எல்லையைத் தாண்டி நிறுவன நிர்வாகத்தில் தலையிடுவதைத் தடுப்பதோடு, எதிர்காலத்தில் ஐபிசி சட்டத்தின் கீழ் வரும் பல வழக்குகளுக்கு ஒரு முக்கிய முன்னுதாரணமாக அமையும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
India