• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

Election Commission Controversy: எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக பரவும் தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஞானேஷ் குமாரின் முடிவுகளுக்கு 2 தேர்தல் ஆணையர்கள் 10 மாதங்களில் 14 முறை எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியது அம்பலமாகி உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Sep 24, 2026, 11:11 IST|Updated: Sep 24, 2026, 11:44 IST
joinshare
வெளிச்சத்திற்கு வந்த SIR குளறுபடிகள்.. தேர்தல் ஆணையர் மீது பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடக்கிறது?

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

“ஜோசப் விஜய் அரசு இந்து விரோத அரசு”.. வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

2

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

3

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

4

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

5

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Election Commission Controversy: இந்திய தேர்தல் ஆணைத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் அவர்  தன்னச்சையாக செயல்பட்டதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' வெளியிட்ட புலனாய்வுத் தகவல்கள் தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.  எனவே, தேர்தல் ஆணையத்தில் என்ன பிரச்னை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

தேர்தல் ஆணையத்தின் நடப்பது என்ன?

இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் பதவி வகித்து வருகின்றனர். சட்டவிதிகளின்படி, ஆணையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஒருமனதாக எடுக்க வேண்டும்.  இவர்கள் மூன்று பேரின் மேற்பார்வையில் தான், எஸ்ஐஆர் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. நாடு முழுவதும் தேர்தல் ஆணையம்  வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை (SIR) மேற்கொண்டது.  

எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் 2025, ஜூன் மாதம் பீகார் மாநிலத்தில் தொடங்கி, அடுத்தடுத்து தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது. எஸ்ஆர் பணிகளில் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்ஐஆர் நடவடிக்கை அரசியல் ஆதாயத்திற்காக நடப்பதாக எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றச்சாட்டை வைத்து வருன்றனர். இந்த நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கைகள் குறித்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் 10 மாதங்களில் 14 முறை எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது  அம்பலமாகிள்ளது. எஸ்ஐஆரில் பெயர் சேர்த்தல்,  நீக்குதல், Form 6-ல் செய்த மாற்றங்கள் ஆகியவை தங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி கூறியுள்ளனர். இந்த முடிவுகளுக்கு இருவரும் எதிர்ப்பும் தெரிவித்து இருக்கின்றனர்.  இரு தேர்தல் ஆணையர்களும் எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்து இருக்கின்றனர்.   இதில் ஒரே நாளில் மட்டும் 4 முறை ஆட்சபனை கடிதம் எழுதியிருக்கின்றனர்.

10 மாதங்களில்.. 14 ஆட்சேபங்கள்

தேர்தல் ஆணையர்கள் சுக்பர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் பதிவு செய்த 14 எதிர்ப்புகள்.

அக்டோபர் 28,2025 - தேர்தல் ஆணையத்தின் பெயரி கடிதங்கள் அல்லது உத்தரவுகள் வெளியிடும்போது, முழு ஆணையத்தின் உரிய ஒப்புதல் இருக்க வேண்டும் என சுக்பீர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 16, 2026 - தேர்தல் ஆணையத்தின் ஐடி பிரிவு புதிய ஆன்லைன் சேவைகள், இணையதளங்கள் குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் வாயிலாக தான் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுக்பர் சிங் சாந்து கடிதம் எழுதியுள்ளார்

ஏப்ரல் 16, 2026 - ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்/தகவல்கள் வெளியிடப்படுகின்றன என சாந்து கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 16, 2026 - கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக, ஆணையத்தின் கூட்டங்களுக்கு முன்பாக எந்த நிகழ்ச்சி நிரலும், கூட்டத்திற்குப் பிறகு எந்தக் குறிப்புகளும்  வழங்கப்படவில்லை என என ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்

ஏப்ரல் 16, 2026 - தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களைச் மேற்கொள்கின்றனர் என ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

ஏப்ரல் 24, 2026 - ஆணையத்தின் ஒப்புதல் இன்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் வெளியிடக் கூடாது என ஜோஷி கடிதம் எழுதியுள்ளார்.

மே 16, 2026 - அரசின் ஒப்புதல் இன்றி படிவம் 6-ல் (புதிய வாக்காளர் பதிவு) விதிமுறைகள் மாற்றம் செய்ய வேண்டாம் என ஜோஷி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த கருத்துக்கு மே 19ல் சாந்துவும் உடன்பட்டார்.

மே 29, 2026 - வாக்காளர் பட்டியல் தரவுத்தளம் கட்டுப்பட்டு மத்தி ஐடி அமைப்பை நோக்கி நகர்வதாடு ஜோஷி கவலை தெரிவித்தார். இதற்கு ஜூலை 13ஆம் தேத சாந்துவும் வழிமொழிந்தார்.

ஜூலை 29, 2026 - மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க், தேர்தல் ஆணையத்துடன் முழுமையாக ஆலோசனை செய்யாமல் பணி ஒதுக்கீடு செய்வதாக ஜோஷி எடுத்துரைத்தார்.

ஜூலை 29, 2026 - பணியில் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் மீண்டும் சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க சாந்து கேபினட் செயலாளருக்கு கடிதம் எழுதினார்.

ஜூலை 30, 2026- புதிய பணிப் ஒதுக்கீட்டு உத்தரவை ஜோஷியும் சாந்தும் நிராகரித்தனர். தங்கள் ஒப்புதலின்றி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறினர்.

ஆகஸ்ட் 12, 2026 - மேற்கு வங்கத் தீர்ப்பாயங்களில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்தது யார் என  கேள்வி எழுப்பினார் சாந்து.

ஆகஸ்ட் 13, 2026 - புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான படிவம் 6ல் எஸ்ஐஆர் தொடர்பான புதிய அறிவிப்பு சேர்க்கப்பட்டதற்கு சாந்து எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆகஸ்ட் 14, 2026 - தேர்தல் ஆணைய கள அதிகாரிகளால் 'ECI Net' அமைப்பைப் பயன்படுத்த முடிவதில்லை. அதைத் தடுப்பதற்கோ அல்லது கட்டுப்படுத்துவதற்கோ தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைமை இயக்குநருக்கு (DG-IT) எவ்வித அதிகாரமும் இல்லை என சாந்து வலியுறுத்தினார்.

மறுதேர்தல் நடத்த வேண்டும்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆர் விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டது எதிர்க்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரகா அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.  

இதனால், மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. உடனடியாக ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என குரல்களும் எழுந்து வருகிறது. தலைமை தேர்தல் ஆணையரின் நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனாவின் உத்தவ் தாக்கரே,  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறினார்.  

 

CEC Gyanesh Kumar Must Go: He Has No Right to Continue in Office!

The Dravida Munnetra Kazhagam, along with other Opposition parties, has consistently opposed the move to delete crores of voters from the electoral rolls in the name of the Special Intensive Revision (#SIR).… pic.twitter.com/I3zcGkEWb4

— M.K.Stalin (@mkstalin) September 23, 2026

13 கோடி வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஆர் மூன்று கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத்தில் பீகார், 2வது கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக ஆந்திரா, ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது. இதில் தான் நாடு முழுவதும் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன்படி,

மாநிலம்எஸ்ஆர்-க்கு முன்பு  எஸ்ஆர்க்கு பின்பு வாக்காளர்கள் நீக்கம்
தமிழ்நாடு6.4 கோடி வாக்காளர்கள்5.67 கோடி வாக்காளர்கள்74 லட்சம்
டெல்லி1.5 கோடி வாக்காளர்கள்1.0 கோடி வாக்காளர்கள்47.6 லட்சம்
பீகார்7.9 கோடி வாக்காளர்கள்7.3 கோடி வாக்காளர்கள்2.9 கோடி
உத்தர பிரதேசம்15.4 கோடி வாக்காளர்கள்12.6 கோடி வாக்காளர்கள்2.9 கோடி
மேற்கு வங்கம்7.7 கோடி வாக்காளர்கள்7.1 கோடி வாக்காளர்கள்58.2 லட்சம்
மகாராஷ்டிரா9.8 கோடி வாக்காளர்கள்7.7 கோடி வாக்காளர்கள்2.1 கோடி

மௌனத்தில் முதல்வர் விஜய்

நாட்டில் பெரிய அரசியலமைப்பு சர்ச்சை வெடித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் மௌனம் காத்து வருகிறார். விஜய் மற்றும்  அவரது கட்சி எந்தவிதமான எதிர்வினையும் தெரிவிக்காமல் இதுவரை இருக்கின்றனர். பொதுமாக நீட், சமூகப் பிரச்னைகளுக்கு தவெக அரசு அறிக்கைகள் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அமைதி காத்து வருகிறார். முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer