• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட காரணத்தால், அந்த விமானம் ஹைதராபாத் நகரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Written BySudharsan G
Published: Oct 11, 2026, 05:22 PM IST|Updated: Oct 11, 2026, 06:01 PM IST
joinshare
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு
Image Credit: Indigo Flight Fire | Screen Grab: X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

2

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

3

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

4

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

5

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delhi - Chennai Indigo Flight Fire Accident: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி இன்று பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த இண்டிகோ விமானம ஹைதராபாத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் லக்கேஜ் வைத்திருந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தற்போது நெருப்பு அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணி வைத்திருந்த பவர் பேங்க் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க | கடலில் ஒரு மிதக்கும் நகரம்! மும்பை வந்த ‘கார்டெலியா ஸ்கை’ சொகுசு கப்பல் – பிரமிக்க வைக்கும் அம்சங்கள்!

இணையத்தில் வெளியான வீடியோ

தீ விபத்தான விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பயணிகள் லக்கேஜ் வைக்கும் பகுதியில் ஏற்பட்ட தீயை, பயணிகள் தங்களின் பேக்கை வைத்து அணைக்க முயல்வதை பார்க்க முடிந்தது. இருப்பினும், விபத்து எந்த இடத்தில், எப்போது நடந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

IndiGo flight 6E6115 from #Delhi to #Chennai was diverted to #Hyderabad on October 11 after a power bank reportedly caught fire onboard. The cabin crew used a fire extinguisher to contain the blaze. The Airbus A321neo (VT-NOE) departed at 1:30 PM and was scheduled to land in Chennai at 4 PM. The exact time and location of the fire, and details of any injuries, remain unconfirmed.

— Ashish (@KP_Aashish) October 11, 2026

அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்

இண்டிகோ விமானம் 6E6115, ஏர்பஸ் A321-251N, டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. மதியம் 1.10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மதியம் 1.30 மணிக்குதான் அந்த விமானம் புறப்பட்டது. மதியம் 4 மணிக்கு அந்த விமானம் சென்னை வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், தீ விபத்து காரணமாக விமானம் ஹைதராபாத்திற்கு திருப்பிவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

தீயணைப்பான் மூலம் விமானப் பயணிகள் தீயை அணைத்து நிலைமையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பயணிகள், பணியாளர்கள் என அனைவருமே பாதுகாப்பாக உள்ளனர்.

இண்டிகோ நிறுவனம் விளக்கம்

இந்த விபத்து குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில், "இன்று (அக். 11) டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானம் 6E 6115, வாடிக்கையாளருக்கு சொந்தமான மின்னணு சாதனத்தில் இருந்து தீ வருவது தெரிந்து விமானம் உடனடியாக ஹைதராபாத் நகருக்கு திருப்பிவிடப்பட்டது.

உடனடியாக, விமானப் பணியாளர்கள் செயல்பட்டு நிலைமையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நெறிமுறைகளுக்கு இணங்க, விமானிகள் அந்த விமானத்தை திசை திருப்பி, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கினர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஹைதராபாத் நகரில் இருந்து சென்னைக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.

பாதுகாப்பிற்கே முன்னுரிமை

"இந்த எதிர்பாராத சூழ்நிலையால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். மேலும், சிற்றுண்டிகள் வழங்குதல் மற்றும் உரிய நேரத்தில் தகவல்களைப் பகிர்தல் உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு சிரமத்தை முடிந்தவரை குறைக்க முயல்கிறோம். இண்டிகோவில் எங்கள் வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது" என்றும் இண்டிகோ அதன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: 2027 -இல் ரிப்போர்ட்? சம்பளம், ஓய்வூதியம், அரியர்.... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

Add Zee News as a Preferred Source
TAGS:
India