• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?

Delhi Latest News Updates: காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அஷுதாஸ் ரங்கா ஆகியோர் ஓராண்டுக்கு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Written BySudharsan G
Published: Oct 11, 2026, 11:40 AM IST|Updated: Oct 11, 2026, 11:49 AM IST
joinshare
அபிஜீத் திப்கே விடுதலை... ஆனால் நீதிமன்றம் போட்ட முக்கிய நிபந்தனை - போராட்டம் தொடருமா?
Image Credit: CJP Leaders Released | Image Source : X, AI Designed : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

விவசாயிகளுக்கு தீபாவளி பரிசு! பிஎம் கிசான் திட்டத்தில் ரூ.2000 வரும் தேதி

2

பள்ளிப்படிப்பை பாதியில் கைவிடும் மாணவிகள்... கிராமங்களில் நிலை மோசம்.. ஷாக் ரிப்போர்ட்!

3

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

4

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

5

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Delhi Latest News Updates: நாட்டின் பல்வேறு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கையில் குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், இதனால் பல தேர்தல் முறையற்ற வகையில் நடந்திருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள், காக்ரோச் ஜனதா கட்சி, மாணவ அமைப்பினர் ஆகியோர் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று (அக். 10) போராட்டம் நடத்த திட்டமிட்டப்பட்டது. இதையடுத்து, ஜந்தர் மந்தர் பகுதியின் 4 கி.மீ., சுற்றளவில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. அக். 9ஆம் தேதி இரவு முதல் தொடர்ந்து பல்வேறு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன.

மேலும் படிக்க | விமானத்திலேயே அபிஜீத் திப்கே கைது... இன்ஸ்டா லைவ்வால் பரபரப்பு - நடந்தது என்ன?

3,000 பேர் கைதாகி விடுவிப்பு

டெல்லிக்குள் வரும் முக்கிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றி மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், மத்திய ஆயுதப்படையினர் நேற்று குவிக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைதானார்கள்.

அந்த வகையில், நேற்று மும்பையில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்த காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர்களான அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ், அசுதோஷ் ராங்கா உள்ளிட்டோரை விமானத்திலேயே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தி, தடுப்பு காவலில் எடுத்தனர். அதேபோல், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வந்த பிரபல யூ-ட்யூபர் துருவ் ராத்தீயை அவரது குரூகிராம் இல்லத்தில் வைத்தே போலீசார் தடுப்பு காவலில் எடுத்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 தலைவர்கள்

நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவில் விடுவிக்கப்பட்ட நிலையில், சிஜேபி தலைவர்கள் விடுவிக்கப்படவில்லை. இன்றும் போராட்டம் திட்டமிடப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்த போலீசார் டெல்லி கண்டோன்மெண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அந்த வகையில் அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | துருவ் ராத்தீ கைது... தீவிரமடையும் CJP போராட்டம் - டெல்லியில் பரபரப்பு

டெல்லி போலீசார் X பதிவு

டெல்லி போலீசார் அவர்களின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் போட்ட பதிவில், "அபிஜீத் திப்கே, அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் ஆகியோர் அக்டோபர் 10 அன்று (நேற்று) முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர் என்றும்; உரிய சட்ட நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு, அவர்கள் இன்று டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள எஸ்இஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Preventive arrest u/s 126/170 BNSS of Sh. Abhijeet Dipke, Sh. Ashutosh Ranka and Sh. Saurav Das was done on 10.10.2026. All due legal procedures were followed and they were produced before the SEM Court, Delhi Cantt on 11.10.2026. A bail bond as Surety Bond of ₹50,000/- was filled for maintaining peace and good behaviour, for a period of one year, and they were released by the SEM Court.

— Delhi Police (@DelhiPolice) October 11, 2026

அமைதியையும் நன்னடத்தையையும் பேணுவதற்காக ஓராண்டு காலத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கான ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவர்கள் எஸ்இஎம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FINALLY DELHI POLICE IS FORCED TO RELEASE ABHIJEET DIPKE, ASHUTOSH RANKA AND SAURAV DAS. Cockroaches never die 🪳

— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 11, 2026

இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை

டெல்லியில் நேற்று மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டதற்கும், ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டதற்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெறும் இன்றைய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

மெட்ரோக்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களிலும் பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும் இன்று காலை மெட்ரோ ரயில் இயங்குகிறது என்றும் தடுத்து வைக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்வதற்காக அருகில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

நேற்று திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்திற்கு முன்னதாக மெட்ரோ சேவைகளை முழுவதுமாக நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Explained: இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.120-ஐ எட்டுமா? விலை உயர்வுக்கான பின்னணியும் காரணங்களும்!

Add Zee News as a Preferred Source
TAGS:
Delhi