சில நிறுவனங்கள் ஒரு மனிதரைச் சுற்றி கட்டமைக்கப்படுகின்றன. Apple-க்கு ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி இருந்தாரோ, அதேபோல் Nvidia-வுக்கு ஜென்சன் ஹுவாங். செயற்கை நுண்ணறிவு புரட்சியின் முகமாக பார்க்கப்பட்ட அவர் தொடர்பாக வெளியான தனிப்பட்ட சர்ச்சைகள், சீனா தொடர்பான விவாதங்கள், தலைமை மாற்றம் குறித்த தகவல்கள் மற்றும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகள் உலக முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. சில நாட்களிலேயே Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், "ஜென்சன் இல்லாமல் Nvidia இயங்குமா?" என்ற கேள்வியே தற்போது தொழில்நுட்ப உலகில் அதிகம் பேசப்படுகிறது.
நவம்பர் மாத தொடக்கத்தில் ஜென்சன் ஹுவாங் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக நிறுவனத்துக்கு விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியானது. அதைத்தொடர்ந்து மேலும் சில குற்றச்சாட்டுகள் வெளியாக, சூழல் வேகமாக மாறியது.
சில நாட்களிலேயே அவர் CEO பதவியில் இருந்து விலகினார். ஒரு நிறுவனர் 33 ஆண்டுகள் கட்டியெழுப்பிய பேரரசில் நடந்த இந்த திடீர் மாற்றம் பங்கு சந்தைக்கும், முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே தொழில்நுட்பப் போர் தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக AI சிப் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்களில் அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆனால் ஜென்சன் ஹுவாங் தொடர்ந்து சீனா உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தைகளில் ஒன்று என்றும், Nvidia அந்த சந்தையை புறக்கணிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வந்தார். AI வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரது தத்துவம், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அணுகுமுறையுடன் பலமுறை மோதியதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
1993-ல் Nvidia-வை தொடங்கிய ஜென்சன் ஹுவாங், ஒரு சாதாரண சிப் நிறுவனத்தை உலகின் AI சக்திமிக்க நிறுவனமாக மாற்றியவர். ChatGPT, சுய இயக்க வாகனங்கள், தரவு மையங்கள், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளின் பின்னணியில் Nvidia சிப்புகள் செயல்படுகின்றன. இதனால் பலருக்கு ஜென்சன் ஒரு CEO மட்டுமல்ல, AI புரட்சியின் கட்டட நிபுணராக கருதப்படுகிறார்.
Nvidia-வில் பல உயர்மட்ட பொறியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 15 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் பங்கு விருப்பத் திட்டங்கள் மூலம் கோடீஸ்வரர்களாகவும் மாறியுள்ளனர். இந்நிலையில் ஜென்சன் ஹுவாங் விலகினால், அவருக்கான விசுவாசத்தின் காரணமாக சில முக்கிய திறமையாளர்கள் வெளியேறலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடம் உள்ளது.
AI துறையில் திறமையான GPU மற்றும் Infrastructure Engineers மிகவும் அரிதானவர்கள். Nvidia-வில் உள்ள இந்த உயர்தர திறமைகளை Meta, OpenAl, Anthropic போன்ற நிறுவனங்கள் கவர முயற்சிக்கலாம். தலைமை மாற்றத்தால் உருவாகும் குழப்பம், போட்டி நிறுவனங்களுக்கு திறமைகளை பணியமர்த்த சிறந்த வாய்ப்பாக அமையக்கூடும்.
நிறுவனர் விலகுதல் என்றாலே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக மாறுவார்கள். அதுவும் உலகின் மிகப்பெரிய AI நிறுவனத்தில் நடந்தால் தாக்கம் இன்னும் அதிகம். அதாவது நிறுவனத் தலைமை மாற்றம், அரசு விசாரணைகள் குறித்த அச்சம், சீனா தொடர்பான விவாதங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி திட்டங்களில் ஏற்படும் சாத்தியமான மாற்றங்கள் குறித்து தற்போது முதலீட்டாளர்களை கவலைப்படுத்தும் விதமாக இருக்கிறது.
தொழில்நுட்ப உலகில் இது சாத்தியமற்ற விஷயம் அல்ல. OpenAl-யில் Sam Altman மீண்டும் திரும்பிய சம்பவம், Apple-ல் Steve Jobs மீண்டும் தலைமை ஏற்ற வரலாறு ஆகியவை இதற்கு உதாரணம். அதேபோல் Nvidia நிர்வாக சபை, முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இருந்தால் ஜென்சன் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வர வாய்ப்பு உள்ளதாக சில சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.
Nvidia-வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு புதிய CEO மீது இருக்கும். ஆனால் அவர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் சாதாரணமானவை அல்ல. AI போட்டி, அமெரிக்க அரசின் கட்டுப்பாடுகள், சீனா சந்தை, முதலீட்டாளர் நம்பிக்கை மற்றும் திறமையான ஊழியர்களை தக்க வைப்பது போன்ற பல பிரச்சினைகள் ஒரே நேரத்தில் காத்திருக்கின்றன.
தற்போதைய சர்ச்சைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் Nvidia இன்னும் AI புரட்சியின் மையத்தில் உள்ளது. உலகின் முன்னணி AI சிப் உற்பத்தியாளராக அதன் நிலை தொடர்கிறது. எனினும் அடுத்த சில மாதங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மிக முக்கியமானதாக இருக்கும். புதிய தலைமை, அரசு நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஆகியவை Nvidia-வின் அடுத்த பாதையை நிர்ணயிக்கலாம்.
Nvidia முதலீட்டாளர்கள் உணர்ச்சிவசப்படாமல் மூன்று விஷயங்களை கவனிக்க வேண்டும். முதல் விஷயம் நிறுவனத்தின் புதிய தலைமை யார் என்பது. இரண்டாவது அரசு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் அடுத்த நடவடிக்கைகள். மூன்றாவது AI சந்தையின் நீண்டகால வளர்ச்சி தொடருகிறதா என்பதுதான்.
1. Nvidia-வை மையமாகக் கொண்ட தலைமை சர்ச்சை உலக சந்தையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
2. ஜென்சன் ஹுவாங் தொடர்பான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
3. சீனா தொடர்பான AI சிப் விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
4. Nvidia பங்கு விலை கடுமையான ஏற்ற இறக்கத்தை சந்தித்துள்ளது.
5. நிறுவனர் இல்லாத Nvidia எப்படி செயல்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
6. திறமையான AI பொறியாளர்கள் வெளியேறும் அபாயம் பேசப்படுகிறது.
7. OpenAl, Meta, Anthropic போன்ற நிறுவனங்களுக்கு இது வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
8. புதிய CEO தேர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
9. ஜென்சன் ஹுவாங் மீண்டும் திரும்பும் வாய்ப்பு குறித்து சந்தையில் விவாதம் நீடிக்கிறது.
10. AI துறையின் எதிர்காலத்தில் Nvidia இன்னும் முக்கிய சக்தியாகவே உள்ளது.