• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்? '10 நிமிட' கெடு.. கமேனி வார்னிங்!

ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்? '10 நிமிட' கெடு.. கமேனி வார்னிங்!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written ByR Balaji
Published: Nov 01, 2026, 12:06 PM IST|Updated: Nov 01, 2026, 12:10 PM IST
joinshare
ஈரானுக்கு மீண்டும் குறிவைக்கும் டிரம்ப்? '10 நிமிட' கெடு.. கமேனி வார்னிங்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

நவம்பர் மாதம்: வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை.. முழு லிஸ்ட் இதோ!

2

ரயில் பயணிகள் கவனத்திற்கு... மதுரை கோட்டத்தில் வழித்தடம் மாற்றம் - முழு விவரம்

3

விராட் கோலி சொதப்பல்.. NZ ஒருநாள் தொடரில் விளையாடுவாரா? என்ன நடந்தது?

4

மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ்! நவ.4-ல் அக்கவுண்டில் கிரெடிட் - முழு விவரம்

5

US Midterm Election: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்றால் என்ன? டிரம்புக்கு காத்திருக்கும் ஷாக்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய ஒன்று அல்லது இரண்டு முக்கிய இலக்குகள் மீது இன்னும் தாக்குதல் நடத்த வேண்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் இருந்து வரும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்திக்க டிரம்ப் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் ஏற்கனவே தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும், இன்னும் ஒன்று அல்லது இரண்டு இர்டங்கள் எஞ்சியுள்ளதாகவும், அவற்றை வெறும் 10 நிமிடங்களில் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்தார். குறிப்பாக, ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ‘Pickaxe Mountain’ பகுதியையும் அவர் குறிப்பிட்டார். இத வாரமே ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அப்படியொரு முடிவை எடுத்திருந்தாலும் அதை முன்கூட்டியே தெரிவிப்பேனா எனக் கேட்டு பதிலளித்தார்.

அதேநேரத்தில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறுவதாக குறிப்பிட்ட டிரம்ப், அந்த நாடு நம்பகத்தன்மை இல்லாதது என்றும் விமர்சித்தார்.

அமெரிக்காவுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை

டிரம்ப்பின் கருத்துகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது எந்த வகையான அச்சுறுத்தல் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு உடனடியாகவும் தீவிரமாகவும் பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் பேசிய அவர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சொந்தமான அனைத்து வகையான சொத்துகள் மற்றும் முக்கிய இலக்குகளையும் தாக்குதல் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்த நிலையில், ஈரான் ராணுவத்தின் உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது தாக்குதலா?

அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று டிரம்ப் சமீபகாலமாக கூறி வருகிறார். கடந்த வாரம் பேசிய அவர், ஈரான் மீது மீண்டும் ஒரு சிறிய அளவிலான ‘Epic Fury’ ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிராக குறுகிய காலம் நீடிக்கும். ஆனால், தீவிரமான ராணுவ நடவடிக்கைக்கு தயாராக இருக்குமாறு வளைகுடா அரபு நாடுகளிடம் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளதாக ’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் தேவைப்பட்டால் ராணுவ இலக்குகளை அடையும் திறன் அமெரிக்காவுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், புதிய தாக்குதல் தொடர்பாக அதிபர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், வணிக கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தொடங்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

இதற்கிடையே, ஜூன் 17 ஆம் தேதி டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இடையே 14 அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உடனடியாக ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதுடன், அடுத்த 60 நாட்களுக்குள் நிரந்தர ஒப்பந்தத்தை எட்டுவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஆனால், ஜூலை 8-ம் தேதி இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஈரானும், ஒரு வாரத்துக்கு பிறகு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்தியது. இதையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, ஈரானின் மத அடிப்படையிலான ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஏற்கெனவே இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற பெரிய அளவிலான தாக்குதல்களை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம், அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், மறுபுறம் அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்து வருவது மத்திய கிழக்கில் மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
World