Nvidia எனும் அமெரிக்காவின் முக்கிய சிப் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார், ஜென்சன் ஹுவாங். இவர், தான் தன்னுடைய மனைவிக்கு துராேகம் இழைத்து விட்டதாக பொதுவெளியில் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இவருடைய இந்த தவறு, ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக விளங்கி இருக்கிறது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
அமெரிக்காவின் சிப் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது Nvidia. இது, செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி கிராபிக்ஸ் துறைக்கு தேவையான சக்திவாய்ந்த கணினி சிப்கள் மற்றும் கிராஃபிக்ஸ் பிராசசர்களை தயாரிக்கும் முன்னணி அமெரிக்க பன்னாட்டு நிறுவனமாக இருக்கிறது.
இவர்கள், Chatgpt போன்ற நவீன ஏஐ தொழில்நுட்பங்களுக்கும், ஏஐ மென்பொருள்களுக்கும் தேவைப்படும் அதிநவீன பிராசசர்களை உறுபத்தி செய்து வருகிறது. உலகளவில் ஏஐ சிப் சந்தையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இது கொண்டிருக்கிறது.
பெரிய நிறுவனங்களின் தரவு மையங்கள், சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உயர் செயல்திறன் கொண்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை இது வழங்குகிறது. இது, தானியங்கி வாகனங்கள் மற்றும் ரோபோக்களூக்கான ஏஐ தளங்களையும் தொழில்நுடங்களையும் உருவாக்குகிறது.
இந்த நிறுவனத்தின், நிர்வாக இயக்குநராக இருக்கிறார், ஜென்சன் ஹுவாங். இவருக்கு, தற்போது 63 வயது ஆகிறது. இவர் செய்த ஒரு செயல்தான் தற்போது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலான பாதகத்தை விதைத்துள்ளது.
ஜென்சன் ஹுவாங்கும், சீன பெண் தொழிலதிபரான ஆலிஸ் ஹுவாங்க் என்பவரும் ரகசிய தொடர்பில் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல் கசிந்து வருகிறது. ஆலிஸ் ஹுவாங், சீன உளவு அமைப்பிற்காக செயலப்ட்டதாக அமெரிக்க உள்துறை அதிகாரிகள் சந்தேகித்ததாக சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இதையடுத்துதான், ஜென்சனுடன் அவருக்கு இருந்த உறவு குறித்து அனைவரும் அதிகம் பேச ஆரம்பித்தனர். அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மீறி, சீனாவுக்கு அதிநவீன ஏஐ சிப்களை பெற உதவியதாக குற்றம் சாட்டப்படும் சிங்கப்பூரின் ‘மெகா ஸ்பீட்’ தரவு மையத்தின் நிறுவனத்துடன் ஆலிஸ் ஹுவாங் தொடர்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஆலிஸ் ஹுவாங், தற்போது சீன பெண் உளவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். இவருடன் தனக்கு தொடர்பு இருந்ததை, ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டுள்ளார். மனைவி மற்றும் குடும்பத்தாருடன் மன்னிப்பு கேட்டுக்கொண்ட இவர், நிறுவனத்தின் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு செய்ய தவறிய கடமைகளுக்கு முழு பொறுப்பேற்பதாக கூறியிருக்கின்றனர்.
இந்த சம்பவத்தால், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கோ, என்விடியாவின் வர்த்தக ரகசியங்களுக்கோ எந்த வித பாதிபும் ஏற்படவில்லை என்றாலும், விசாரணை நடத்தப்படும் என்று என்விடியாவின் இயக்குநர்கள் வாரியம் தெரிவித்திருக்கிறது.
ஜென்சன் ஹுவாங், இது குறித்து ஒரு செய்தி அறிக்கைை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“எனது குடும்பத்தினரிடமும், உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என் மனைவியிடம் உண்மையற்றவனாக நடந்துகொண்டேன். எனது செயல்கள் அவளையும், எங்கள் குழந்தைகளையும் காயப்படுத்தியுள்ளன.
நான் செய்ததற்கு எந்த நியாயமும் இல்லை. இதற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும், என் குடும்பத்தினர் எனக்கு அன்பையும் ஆதரவையும் வழங்கி வந்துள்ளனர். அவர்கள் எனது நேர்மையையும் விசுவாசத்தையும் பெறத் தகுதியானவர்கள்; ஆனால், நான் அவர்களை ஏமாற்றி, நாங்கள் இணைந்து கட்டியெழுப்பிய வாழ்க்கையைப் பாதித்துவிட்டேன்.
நான் செய்த செயல்களுக்கும், அதனால் ஏற்பட்ட காயங்களுக்கும் முழுப் பொறுப்பேற்கிறேன்; இதற்காக வரும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். என் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு: நான் உங்களை நேசிக்கிறேன். நான் செய்ததை வெறும் மன்னிப்பால் சரிசெய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். எங்கள் குடும்பம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், காலப்போக்கில் உங்கள் நம்பிக்கையை என்னால் மீண்டும் பெற முடியும் என்றும் நம்புகிறேன்.
NVIDIA-வில் உள்ள எனது சக ஊழியர்களுக்கு — பல ஆண்டுகள் என்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள் உட்பட — மற்றும் எங்கள் வாரியம், கூட்டாளிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பங்குதாரர்களுக்கு: நீங்கள் என்னிடமிருந்து இன்னும் சிறந்த நடத்தையை எதிர்பார்க்க உரிமை கொண்டவர்கள். NVIDIA-வை வழிநடத்துவது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த ஒரு பெரும் பாக்கியம்.
உங்களுக்குச் சேவை செய்வதும், உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பதுமே எனது பொறுப்பு. அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் நான் தவறிவிட்டேன். நான் தொடர்ந்து NVIDIA-வுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்; உங்கள் நம்பிக்கையை மீண்டும் வென்றெடுக்க உழைப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும், ஜென்சன் ஹுவாங்கின் மனைவி லோரி மில்ஸ் ஹுவாங் குறித்து பேசி வருகின்றனர். “தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை, செய்திகள் வாயிலாக தெரிந்து கொள்ளும் அந்த பெண்ணின் கதி என்ன ஆகுமோ..?” என்று பலரும் கூறி வருகின்றனர்.
லோரி, பெரிதாக கேமரா கண்களில் படாத ஒரு ஆளாக இருந்தார். இவருக்கும் ஜென்சனுக்கும் திருமணமாகி 41 வருடங்களுக்கும் மேல் ஆகிறது.
லோரியும் ஜென்சனும் ஓரிகேன் பல்கலைக்கழகத்தில் சந்தித்துள்ளனர். அங்கு இருவரும் ஒன்றாக எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர். இது, Nvidiaவுக்கு எல்லாம் முன்னதாக 1980களில் நடந்துள்ளது.
Lori Millsம், ஆண்களால் அதிகம் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு துறையில் இருந்த பெண்ணாக இருந்துள்ளார். இருவரும் சந்தித்த போது 17 வயதே நிரம்பியவர்களாக இருந்துள்ளனர். ஒன்றாக படிப்பதில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, அப்படியே காதலாக மாறி பின்பு திருமணத்திலும் முடிந்துள்ளது.
குழந்தைகள் பிறந்த பிறகு தன் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனும் காரணத்தால் அவர் தன் வேலையை விட்டுள்ளார். இவர்களுக்கு ஸ்பென்சர் மற்றும் மேடிசன் என இரு குழந்தைகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்து பேசுகையில், ஜென்சனை ஒரு நேர்மையான மனிதர் என்றும், நாட்டிற்காக அவர் மிகச்சிறப்பான பணிகளை செய்துள்ளார் என்றும் கூறி இந்த விஷயத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார்.