• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /மகளுக்கு தெரிந்தே பிற பெண்களுடன் காதல் வளர்த்த ஜென்சன் ஹுவாங்? வெளிவந்த உண்மை!

மகளுக்கு தெரிந்தே பிற பெண்களுடன் காதல் வளர்த்த ஜென்சன் ஹுவாங்? வெளிவந்த உண்மை!

ஜென்சன் ஹுவாங்கின் திருமணம் மீறிய உறவு தற்போது உலக அளவு சென்சேஷனை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து, இந்த விஷயம் ஏற்கனவே அவருடைய மகளுக்கு தெரியுமோ என்கிற சந்தேகம் வந்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Nov 15, 2026, 12:44 IST|Updated: Nov 15, 2026, 12:51 IST
joinshare
மகளுக்கு தெரிந்தே பிற பெண்களுடன் காதல் வளர்த்த ஜென்சன் ஹுவாங்? வெளிவந்த உண்மை!
Image Credit: Jenson Huang | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Nvidia நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஜென்சன் ஹுவாங், 2க்கும் மேற்பட்டோருடன் பாலியல் உறவில் இரூந்ததாக கூறப்படுகிறத்.உ.  இந்த விஷயம், அவருடைய மகளுக்கும் தெரியுமா?

3 பெண்களுடன் தொடர்பா?

என்விடியா முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ஜென்சன் ஹுவாங், தன்னுடைய நிறுவனத்துடன் தொடர்புடைய 3வது பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாக சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியானது. இந்த உண்மை, சீன பெண் தொழிலதிபர் ஒருவர் ஜென்சன் ஹுவாங்குடன் உறவில் இருந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் பல்வேறு டெக் கம்பெனிகளுக்கு, குறிப்பாக ஓப்பன் ஏஐ, ஆந்த்ரோபிக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சிப் தயாரித்து கொடுக்கும் அமெரிக்க நிறுவனமாக இருக்கிறது என்விடியா. அந்த சீன பெண் தொழிலதிபர், சீனாவின் உலவாளியாக இருக்கலாம் என தகவல் எழுந்ததை தொடர்ந்து, இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சீன உலவாளி என்று சொல்லப்படும் அந்த பெண்ணின் பெயர், அலைஸ் ஹுவாங். இவரையடுத்து, கிம்பெர்லி பாவல் எனும் அவருடைய நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருக்கும் இன்னொரு பெண்ணுடனும் இணைத்து ஜென்சன் ஹுவாங்கின் பெயர் அடிப்பட்டது. இப்போது, இன்னொரு பெயர் வெளியிடாத பெண்ணுடனும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மகளுக்கு தெரியுமா?

சமீபத்தில், நியூயார்க் போஸ்ட் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில், ஜென்சன் ஹுவாங் Taipeiல் ஒரு டின்னரில் கலந்து கொண்டுள்ளார். அதில், அவருடன் Aliceம் இருக்கிறார். இவர்களுடன், ஜென்சன் ஹுவாங்கின் மகள் மற்றும் அவரது வருங்கால கணவர் உள்ளிட்டோருடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டோ, 2024ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இவரும் ஹுவாங்கும் டிசம்பர் 2023ஆம் ஆண்டில் இருந்து டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அந்த மகளுக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்குமோ எனும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | 24 மணி நேரமாகியும் சரியாகாத பிரச்சினை! 1.5 லட்சம் புகார்கள்.. Microsoft-ல் நடந்தது இதுதான்?

போட்டோவில் இருப்பது என்ன?

அந்த டின்னரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், Alice ஜென்சன் ஹுவாங்குடன் கட்டிப்பிடித்து அமர்ந்திருப்பது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால், அவரது மகளான மேடிசனுக்கும் இது தெரியும் என கூறப்படுகிறது.

யார் இந்த ஜெய்மி மில்லர்..?

ஜென்சனின் காதலிகளுள் ஒருவராக கூறப்படும் ஜெய்மி மில்லர், என்விடியாவின் மூத்த துணை தலைவர் மற்றும் தலைமை தகவல் அதிகாரியின் மூத்த நிர்வாக் உதவியளர் ஆக இருக்கிறர். இவர், 2020ஆம் ஆண்டு நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறர். அடிப்படை திட்டமிடல், மற்றும் செயல்பாடுகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், மில்லர் என்விடியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்பிற்குள் ஒரு மூலோபாய வணிக பங்காளராக செயல்படுகிறார்.

சீனா குற்றச்சாட்டுகள் குறித்து சீனா சொல்வது என்ன?

சீனா, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. சிங்கப்பூர் தரப்பும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை என தெரிவித்திருக்கிறது. என்விடியா நிர்வாக குழுவும், நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் குறித்து உள் விசாரணை ஒன்றை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | Explainer: என்விடியா Ex-CEO ஜென்சன் ஹுவாங்கின் 3வது Affair? முன்னாள் ஊழியர்கள் கசியவிட்ட ஷாக் தகவல்!!

Add Zee News as a Preferred Source
TAGS:
World