• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /“கல்யாணம் பண்ணிக்கலாமா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!

“கல்யாணம் பண்ணிக்கலாமா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!

ஆஸ்திரேலிய அமைச்சரான ஜார்டன் லேன் என்பவர், நாடாளுமன்றத்தில் தன் காதலி நேட்டலிக்கு காதல் ப்ரப்போஸ் செய்தார். இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..

Written ByYuvashree M
Published: Nov 22, 2026, 15:08 IST|Updated: Nov 22, 2026, 15:21 IST
joinshare
“கல்யாணம் பண்ணிக்கலாமா..?” நாடாளுமன்றத்தில் காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்!
Image Credit: Australian MP Proposes to his girlfriend on live | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

2

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

3

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

4

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

5

திருவண்ணாமலையில் கிரிவலம் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இதற்கெல்லாம் தடை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாடாளுமன்றத்தில், என்ன செய்வர்? அரசு திட்டங்களை பரிந்துரைப்பர், மக்கள் நலன் குறித்து விவாதிப்பர், அரசு ஏதேனும் திட்டத்தை அறிவித்திருந்தால், அதனால் என்னென்ன பயன் கிடைத்துள்ளது அல்லது எந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்வர். ஆனால், இங்கு ஒருவர், தன் காதலிக்கு ப்ரப்போஸ் செய்துள்ளார். இதை, அமைச்சரவையில் இருந்த அனைவரும் கொண்டாடி இருக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அமைச்சர்:

ஆஸ்திரேலிய அமைச்சரான ஜோர்டன் லேன், Ryde எனும் பகுதியின் அமைச்சராக இருக்கிறார். இவர், தன் தொகுதிக்கு வேண்டிய விஷயங்களை அடிக்கடி நாடாளுமன்றத்தில் பேசி வந்தார். இவர், நாடாளுமன்றத்தில் தன்னுடைய கடைசி உரைய நிகழ்த்தினார். அப்போது, அவர் பேசுகையில் அன்பை பற்றியும், தன் வாழ்வில் மிகவும் முக்கியமான நபர்கள் பற்றியும், தான் வாழ்வில் எடுக்கப்போகும் பெரிய முடிவு பற்றியும் பேசியிருந்தார்.

சபாநாயகர், லேனை அழைத்து பேச சொன்ன போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தன் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்வது, ரொம்ப சுலபமானதாக இருக்கவில்லை என்று கூறிய அவர், அது முக்கியமாக எடுக்க வேண்டிய முடிவு என்று தெரிவித்தார். தன் வாழ்வில் அன்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருப்பதாக தெரிவித்த அவர், இந்த உணர்வை வெளியில் சொல்லக்கூட முடியாது என்று தெரிவித்தார். அன்பும் அரசியலும்தான் தனக்கு தான் யார் என்பதை காண்பித்ததாகவும், அவைதான் தனக்கு தன் வாழ்வில் நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

”நான் அரசியல் பின்னணியில் இருந்து வரவில்லை. Rhyde பகுதியை சேர்ந்த மக்களும், எதிர்கட்சியில் அமர கால் நூற்றாண்டிற்கும் மேல் அவர்கள் அமைச்சரை தேர்ந்தெடுக்கவில்லை” என்று ஆரம்பித்த அவர், தன் தாய் தந்தைக்கு தன் உரையில் நன்றி கூறியதோடு, அவர்கள்தான் தனக்கு கடின உழைப்பு மற்றும் வாழ்க்கை பாடங்கள் குறித்து கற்றுக்கொடுத்ததாக கூறினார்.

மேலும் படிக்க | இனப்படுகொலை: ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு கிடைத்த நீதி.. காசா மக்களுக்கு பொருந்துமா?

📺WATCH | Australian MP Jordan Lane proposes to his longtime girlfriend Natalie during his farewell speech in the New South Wales Parliament https://t.co/ci39jwvBbW

— The Tatva (@thetatvaindia) November 20, 2026

தன் குடும்பத்தினர் குறித்து பேசியதை அடுத்து, தன் பார்ட்னர் ஆன நேட்டலிக்கு நன்றி தெரிவித்த அவர், தங்களின் உறவு பல தடைகளை கடந்து உயிர்ப்புடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும், நேட்டலிதான் தன் வாழ்வில் பல விஷயங்கள் உண்மையாகவும் நல்லதாகவும் இருப்பதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

காதலிக்கு ப்ரப்போஸ் செய்த அமைச்சர்:

தன் உரையை முடிக்கும் முன்னர், தன்னுடைய காதலியை நேரடியாக பார்த்து பேசிய அவர், “சபாநாயகர் அவர்களே, என்னுடைய கடைசி கேள்வி இதுதான். நேட்டலி, என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா..?” என்று கேட்டார். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் ஆர்ப்பரித்தனர்.

எதிரில் அமர்ந்திருந்த நேட்டலி தலை ஆட்ட, நடுங்கிய கைகளால் மோதிரத்தை எடுத்து, தன் காதலி கையில் அணிவித்தார். இவர்களின் திருமணம் விரைவில் நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உச்சமடையும் வங்கதேச தொழிலாளர் போராட்டம்... திருப்பூருக்கு நல்ல செய்தியா...? Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
World