• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சினிமா
  • /ஜெயிலர் 2 : ஐடி ஊழியர் to காமெடி நடிகர்! யார் இந்த நமோ நாராயணா? நடிக்க வந்ததே விபத்துதான்..

ஜெயிலர் 2 : ஐடி ஊழியர் to காமெடி நடிகர்! யார் இந்த நமோ நாராயணா? நடிக்க வந்ததே விபத்துதான்..

நடிகர் நமோ நாராயணா, ஜெயிலர் 2வில், மூர்த்தி அண்ணன் கதாப்பாத்திரத்தில் அனைவரையும் கவர்ந்துள்ளார். இதையடுத்து, அவர் குறித்து பலரும் தேடி வருகின்றனர். அவர் பற்றிய முழு தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 16, 2026, 02:16 PM IST|Updated: Oct 16, 2026, 02:23 PM IST
joinshare
ஜெயிலர் 2 :  ஐடி ஊழியர் to காமெடி நடிகர்! யார் இந்த நமோ நாராயணா? நடிக்க வந்ததே விபத்துதான்..
Image Credit: Namo Narayana | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

சுக்கிரன் பெயர்ச்சி: 2027 புத்தாண்டு முதல் உச்சத்திற்கு போகும் 4 ராசிகள்.. தொழில், வேலையில் ராஜயோகம்!

2

வெஸ்ட் இண்டீஸ் தொடரில்... சூர்யவன்ஷி ஏன் விளையாடவில்லை - கேப்டன் சொன்ன காரணம்

3

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

4

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

5

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நாடோடிகள் திரைப்படத்தில், எது செய்தாலும் வீண் விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசியல்வாதியாக நடித்திருப்பார், நடிகர் நமோ நாராயணா. அந்த படம் மட்டுமல்ல, அவர் நடித்த எந்த படத்தை எடுத்துக்கொண்டாலும் அவருடைய கதாப்பாத்திரம், வில்லனுக்கும் காமெடியனுக்கும் இடையில் உள்ள ஏதோ ஒரு குணாதிசயத்தை கொண்டதாக இருக்கும். அதுவே, அவருக்கு ஜெயிலர் 2 படத்திலும் நன்றாக வர்க் ஆகியிருக்கிறது.

‘மூர்த்தி அண்ணாவாக..’ ஜெயிலர் 2 திரைப்படத்தில்:

ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் மீதும், நெல்சன் திலீப்குமார் மீதும் அதிக வரவேற்பு இருந்தது உண்மைதான். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் காமெடியிலும் நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார், நடிகர் நமோ நாராயணா. இவருடைய கதாப்பாத்திரத்தின் பெயர்தான் மூர்த்தி.

ரஜினிகாந்த் இந்த படத்தின் மெயின் ஈர்ப்பாக இருந்தாலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் தட்டி தூக்கியிருக்கிறார், மூர்த்தி அண்ணா.

‘பழக்கடை மூர்த்தி’ என தன்னை ஒரு வில்லனாக நினைத்துக்கொண்டு அவர் செய்யும் பல விஷயங்கள், வில்லன்களை “இவன் முட்டாளா? இல்ல முட்டாள் மாதிரி நடிக்கிறானா?” என்று யோசிக்க வைப்பது ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

மேலும் படிக்க | அலப்பறை கிளப்பிய ஜெயிலர் 2! முதல் நாள் வசூல் எவ்வளவு? அடடேய்..இவ்ளோ கோடியா?

குறிப்பாக மெயின் வில்லனுடன் சேர்ந்து அவர் செஸ் விளையாடும் இடம்தான் ஹைலைட். இவருடன் சேர்ந்து, ஆங்கிலம் கலந்த தமிழில் பேசி சிரிக்க வைக்கிறார், Bjorn Surrao. “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல..” என்பது போல, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல், தன்னை ஒரு ராஜா பாேலவே கருதி வாழ்ந்து வரும் பழக்கடை மூர்த்தி, உண்மையில் யார் கிங் என தெரிந்த பின்பும், அவரிடம் காமெடி செய்யும் காட்சிகள் ரகளை.

இறுதியில், ரஜினி உள்ளிட்ட பிற நடிகர்களை விட காமெடியில் பலரை ஈர்த்திருக்கிறார், நமோ நாராயணா.

சாஃப்ட்வேர் இன்ஜினியர் to நடிகர்!

நமோ நாராயணா, சினிமாவிற்கு வரும் முன்பு சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவராம். இவருடைய சொந்த ஊர் மதுரை, தாய்-தந்தை இருவரும் தபால் துறையில் வேலை பார்த்தவர்களாக இருந்துள்ளனர். இளம் வயதில் நன்றாக படித்த இவர், வேலைக்கு பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் ஐடி துறையில் வேலை பார்த்திருக்கிறாராம்.

சென்னைக்கு வந்த பிறகு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, அவருடைய நண்பர் மூலமாக தயாரிப்பாளர் மைக்கில் ராயப்பன் இடமிருந்து அழைப்பு வருகிறது. இவர், நாடோடிகள் படம் ரிலீஸான சமயத்தில் மும்பையில் பிசியாக இருந்ததால் அந்த படத்திற்கு எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராக இருக்குமாறு நமோ நாராயணிடம் கேட்டிருக்கிறார்.

அவரும் அதற்கு ஒப்புக்கொண்டு, அந்த படத்தில் நடிக்கவும் செய்துள்ளார். இதில் இன்னொரு ஹைலைட், சமுத்திரகனியும் நமோ நாராயணாவும் 25 வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களாம்.

நாடோடிகள் பட தளத்திற்கு நமோ நாராயணன் நடிக்க வேண்டுமென வரவில்லையாம். அவரை சமுத்திரகனியும் சசிகுமாரும் சேர்ந்து வற்புறுத்தி நடிக்க வைத்திருக்கின்றனர். அப்படித்தான் அவருக்கு அந்த கேரக்டர் கிடைத்தது.

நாடோடிகள் கொடுத்த பூஸ்ட்டை தொடர்ந்து  ஈசன், முதல் இடம், போராளி, கேடி பில்லா கில்லாடி ரங்கா என வரிசையாக பல படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு, ரஜினியுடன் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் படிக்க | ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ்! தியேட்டரில் ரன் முடிந்தவுடன்..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema