Chennai Aavin Parlour: தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் குறைந்த விலையில் மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மக்களுக்கு எளிதாக ஆவின் பால் சென்றடையும் வகையில், ஒவ்வொரு பகுதிகளுக்கு ஆவின் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்கள் எளிதாக பொருட்களை வாங்குகின்றனர்.
ஆவின் பால் மட்டுமின்றி, பனீர், நெய், வெண்ணெய், யோகர்ட், ஐஸ்கிரீம், இனிப்புகள், கார வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது தமிழக அரசின் பால்வளத்துறை ஆவின் பாலகங்கள் அமைக்க விண்ணப்பங்களை கோருகின்றன. அந்த வகையில், சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மாநகரில் ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான 12 பாலகங்களை நடத்த முகவரிக்கு நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பம் விருப்பமான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
ஆவினுடன் இணைந்து தொழில் முனைவோராகும் அரிய வாய்ப்பு! சென்னையில் ஆவின் பாலகங்களை நடத்த இன்றே விண்ணப்பியுங்கள்! #AavinTN #AavinMilk #Entrepreneurship #BusinessOpportunity #AavinDealership https://t.co/UdtoaeAtuh
— Aavin TN (@aavintamilnadu) October 30, 2026
மத்திய சென்னை - அண்ணா சாலை (ஆண்டர்சன் சாலை), அண்ணா நகர் (எம்.எம்.டி.ஏ காலனி, மதுரவாயல், இமயম காலனி, ஷெனாய் நகர்), மற்றும் தி.நகர் (கிரியப்பா சாலை) ஆகிய இடங்களில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை- வேளச்சேரி (உள்ளகரம் இந்து காலனி), தாம்பரம் (யஷ்வந்த் நகர்), மற்றும் பாலவாக்கம் (திருவான்மியூர் காமராஜ் நகர்) பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட சென்னை - அசோக் நகர் (கங்கை அம்மன் கோவில் தெரு, வடபழனி), கொண்டித்தோப்பு போலீஸ் குவார்ட்டர்ஸ், சௌகார்பேட்டை மின்ட் தெரு, மற்றும் பெரம்பூர் (அபிராமி அவென்யூ, கவியரசு கண்ணதாசன் நகர்) ஆகிய பகுதிகளில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் காலி ஆவின் பாலகங்களுக்கும் ஜி.எஸ்.டி (GST) வரியையும் சேர்த்து மாதம் குறைந்தபட்சம் ரூ. 9,000 வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஆவின் பாகலத்தில் முகவர்களாக பணி செய்ய விருப்பப்படுபவர்கள் விண்ணப்ப படிவத்தை aavin.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பொது மேலாளார் (விற்பனை) எண்.3A, ஆவின் இல்லம், பசும்பொன் முத்துராமலிங்கனார் சாலை, நந்தனம், சென்னை -600035 என்று முகவரிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 16.11.2026 (திங்கட்கிழமை) அன்றுக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 044-2346 4500 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.