• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது : மு.க ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது : மு.க ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!

சென்னை எழும்பூரில், செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 06, 2026, 10:48 AM IST|Updated: Oct 06, 2026, 11:02 AM IST
joinshare
போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது : மு.க ஸ்டாலின் உள்பட தலைவர்கள் கண்டனம்!
Image Credit: Nurse Protest Arrest MK Stalin Condemns | X page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

ரூ.45000 பணத்திற்காக..கூலி தொழிலாளியை குத்தி கொன்ற வடமாநில இளைஞர்! பகீர் சம்பவம்..

2

தமிழகத்தில் நாளை மின்தடை: கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மின் விநியோகம் தடை-முழு பட்டியல்

3

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு சூப்பர் செய்தி: அகவிலைப்படி 447% அதிரடி உயர்வு

4

நான் ரத்த வாந்தி மட்டும் தான் எடுக்கல.. மேடையில் உருக்கமாக பேசிய விஜய் சேதுபதி!

5

ச்சீ ஹோட்டல் பாத்ரூம்ல இப்படியா? சாப்பிட வந்தவங்களுக்கு ஷாக்..வைரலாகும் வீடியோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பணி பாதுகாப்பு, சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், அக்டோபர் 5ஆம் தேதியான நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டமானது, எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகே நடைப்பெற்றது, இதில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். அதோடு இந்த போராட்டத்தில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

கோரிக்கைகள் என்ன?

இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும், அரசு வழங்க வேண்டும், செவிலியர்களுக்கு இதுவரை வழங்கப்படும் ரூ.21,000 ஊதியம் போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டு இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதிய்த்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் போராட்டத்தில் முன்னிறுத்தப்பட்டன. மேலும், இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு என முதல்வர் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:

அரசு தரப்பில், செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியானது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, காவல்துறை போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு கூட்டி செல்லாமல், மண்டபத்தில் அடைத்து வைத்திருந்ததாக செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டத்தை கலைக்க கவல்துறையினர் முதலில் மின் இணைப்பை துண்டித்து, பந்தல்களை அகற்றியதாக கூறப்படுகிறது. கலைந்து செல்லவில்லை என்றால் கைது செய்வோம் என எச்சரிக்கையும் விடுத்தது. இதையடுத்து, நேற்றிரவு 8.30 மணியளவில், காவல்துறையினர் செவிலியர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து பேருந்தில் அடைக்க தொடங்கினர். அவர்களை கைது செய்யக்கூடாது என பல செவிலியர்கள் பேருந்திற்கு முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால், போலீசாருக்கும் செவிலியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்பு, அரசு தரப்பிலிருந்து செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில், தங்கள் கோரிக்கைகளை ஏற்க நவம்பர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் அதற்குள் ஏற்கப்படாவிடில், அந்த தேதிக்கு பிறகு மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருக்கின்றனர்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்!

செவிலியர்களின் கைது நடவடிக்கைக்கு எதிராக, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து பதிவிடுகையில், “கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், “பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?

மேலும் படிக்க | தாராபுரம் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு.. பகீர் கிளப்பிய திமுக.. தவெக விளக்கம்

போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு;
தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை!

முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, “போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா?

கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா? #NursesProtest #MedicalWorkersProtest

— M.K.Stalin (@mkstalin) October 6, 2026

போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா?” என்றும் கேட்டிருக்கிறார்.

தொடர்ந்து, எம்.பி. கனிமொழி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சிபிஐ வீரமணி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் படிக்க | தவெக வெற்றிக்கு கைகொடுத்த எஸ்ஐஆர்? ஆய்வில் ஷாக் தகவல் - Explained

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Cinema