Chennai Traffic Diversion: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நாளையும் (நவ. 21), நாளை மறுதினமும் (நவ. 22) சென்னைக்கு வருகை தருவதையொட்டி சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வருகை தருவதை ஒட்டி, குறிப்பிட்ட வழித்தடங்களில் 'பூஜ்ஜிய போக்குவரத்து' (Zero Traffic) நடைமுறை அமல்படுத்தப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னையின் முக்கிய இடங்களில் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தபட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
🚦 மாண்புமிகு இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சென்னை வருகை – பூஜ்ஜிய போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மாற்றங்கள்! 🚦 Visit of the Hon’ble Vice President of India to Chennai – Zero Traffic and Traffic Diversions! 📅 21.11.2026 & 22.11.2026 ➤ 21.11.2026 | பிற்பகல் 2.00 மணி – இரவு 9.00 மணி: முக்கிய வழித்தடங்களில் கனரக மற்றும் வணிக வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும். ➤ 22.11.2026 | காலை 8.00 மணி – 10.30 மணி: அடையாறு – பாரிஸ் கார்னர் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும். 🚧 குறிப்பிட்ட வழித்தடங்களில் பூஜ்ஜிய போக்குவரத்து (Zero Traffic) நடைமுறைப்படுத்தப்படும். ⚠️ பொதுமக்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைத்து, தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ➤ 21.11.2026 | 2:00 PM – 9:00 PM: Traffic diversions for heavy and commercial vehicles will be implemented on key routes. ➤ 22.11.2026 | 8:00 AM – 10:30 AM: Traffic diversions will be implemented on the Adyar – Parry’s Corner routes. 🚧 Zero Traffic protocol will be enforced on designated routes. ⚠️ The public is requested to cooperate with the Traffic Police and plan their journeys in advance, keeping the traffic diversions in mind. #VicePresidentOfIndia #ZeroTraffic #TrafficAdvisory #TrafficDiversion #TrafficUpdate #ChennaiTraffic #PublicSafety #PlanYourJourney
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 20, 2026
நாளை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
நாளை மறுதினம் (நவ. 22) காலை 8 மணிமுதல் இரவு 10:30 மணி வரை வரை செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
போக்குவரத்து நெரிசல் மற்றும் அசௌகரியங்களைத் தவிர்க்க பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், தற்காலிகப் போக்குவரத்து விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே தங்கள் பயணங்களைத் திட்டமிடுமாறும் கேட்டுக்கொள்ளுமாறும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.