• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு குட்நியூஸ்! நாள்தோறும் உணவுப்படி ரூ.50

சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு குட்நியூஸ்! நாள்தோறும் உணவுப்படி ரூ.50

Chennai News : சென்னையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் உணவுப்படியாக ரூ.50 வழங்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Sep 27, 2026, 06:41 IST|Updated: Sep 27, 2026, 06:46 IST
joinshare
சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு குட்நியூஸ்! நாள்தோறும் உணவுப்படி ரூ.50
Image Credit: Tamil Nadu government latest announcement

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

டிசம்பர் 2-ல் புதன் பெயர்ச்சி.. பண மழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

2

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

3

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

4

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

5

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai News : சென்னை தூய்மை பணியாளர்களுக்கான முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமைத்த உணவுக்குப் பதிலாக, நாள்தோறும் ரூ.50 வீதம் கணக்கிட்டு பணமாக உணவுப்படி வழங்க தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.  

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களின் பணி நேரத்திற்கு ஏற்ப காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவுகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கு 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணி ஆணை வழங்கப்பட்டு, இத்திட்டம் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.  

இருப்பினும், ஒப்பந்த நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்ட உணவின் தரம் மிகவும் குறைவாக இருந்ததாகவும், குறிப்பிட்ட நேரத்தில் உணவு விநியோகம் செய்யப்படவில்லை என்றும், சமையலறை மற்றும் பாத்திரப் பராமரிப்பில் சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவதாகவும் தூய்மைப் பணியாளர்கள், திட்டக் கண்காணிப்பு ஆலோசகர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்தன.  

இதனைத் தொடர்ந்து மண்டலம் 1 முதல் 15 வரை பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் விரிவான கருத்துக்கேட்பு மற்றும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுமார் 92 சதவீத பணியாளர்கள், தங்களுக்குத் தயார் செய்து வழங்கப்படும் உணவுக்குப் பதிலாக, அதற்கான தொகையை உணவுப்படியாகப் பணமாகவே வழங்கிவிட்டால் அது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

பணியாளர்களின் இந்த நியாயமான கோரிக்கையைப் பரிசீலித்த சென்னை மாநகராட்சி ஆணையர், உணவு விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பணியாளர்களுக்குப் பணமாக உணவுப்படி வழங்க அரசுக்குக் கடிதம் மூலம் கருத்துரு அனுப்பியிருந்தார். இதனைப் பரிசீலித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தற்போது உணவு வழங்கி வரும் ஒப்பந்த நிறுவனத்தின் 3 ஆண்டு கால ஒப்பந்தத்தை ரத்து செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் அண்டை வீட்டு குழு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களான உர்பேசர் சுமீத் (Urbaser Sumeet) மற்றும் சென்னை என்விரோ சொல்யூசன்ஸ் (Chennai Enviro Solutions) ஆகியவற்றின் கீழ் பணியாற்றும் மொத்தம் 24,264 தூய்மைப் பணியாளர்களுக்கும் இந்நடவடிக்கை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு ரூ.50/- வீதம், அவர்கள் பணிக்கு வருகை தரும் நாட்களுக்கு மட்டும் கணக்கிடப்பட்டு, ஒவ்வொரு மாதமும் ஊதியத்துடன் சேர்த்து உணவுப்படி பணமாக வழங்கப்படும். இதற்காக ஆண்டுக்கு ஏற்படும் மொத்த செலவினமான ரூ.44,28,18,000/- (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே இருபத்தெட்டு லட்சத்து பதினெட்டு ஆயிரம் மட்டும்) தொகையினை சென்னை மாநகராட்சியின் நிதி மூலம் செலவிட நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai