• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.62,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.62,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

TNHRCE Jobs: இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 46 செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவரகள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

Written ByUmabarkavi K
Published: Nov 04, 2026, 09:22 AM IST|Updated: Nov 04, 2026, 09:31 AM IST
joinshare
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.62,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம்: 1500 காலியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம்: 1500 காலியிடங்கள், விண்ணப்பிப்பது எப்படி?

2

நவம்பர் 13ம் தேதி பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கேக்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

3

அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2026: செனட், ஹவுஸ், ஆளுநர் போட்டிகளில் வென்றவர்களின் முழு பட்டியல்

4

சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

5

வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNHRCE Jobs: தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் எனும் டிஎன்பிஎஸ்சி மூலம்  பல்வேறு துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 4 தேர்வு மூலம் அறநிலையத்துறையில் உள்ள 46 செயல் அலுவலர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். எனவே, இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.

முக்கிய தேதிகள்

குரூப் 4 அறிவிப்பு வெளியான தேதி - 2026, அக்டோபர் 6

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிய தேதி - 2026, அக்டோபர் 6

விண்ணப்பிக்க கடைசி தேதி  - 2026, நவம்பர் 5

விண்ணப்ப திருத்தக் காலம் - 2026, நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை

குரூப் 4 எழுத்துத் தேர்வு நடக்கும் நாள் - 2027, ஜனவரி 10

மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு ரிசல்ட் எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு

கல்வித்தகுதி, வயது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் அறநிலையத்துறையில் உள்ள  46 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அறநிலையத்துறையில் செயல் அலுவலர் பணியிடங்கள் Executive Officer (Grade IV) நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ugc அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் தமிழ் புலவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு இந்து மதத்தை பின்பற்றுவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இந்து சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றி இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 01.07.2026 அன்று கணக்கிடப்படும். இந்தப் பதவிக்கு குறைந்தபட்ச வயது 25 இருக்க வேண்டும். மேலும், அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். BC / BCM / MBC / DC பிரிவினர் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / SC(A) / ST 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுளள்ளது. மேலும், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மாதம் ரூ.63000 சம்பளம்.. 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் சூப்பர் வேலை.. முழு விவரம்

மாத சம்பளம்

அறநிலையத்துறையில் செயல் அலுவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இந்து சமய அறநிலையத்துறை பணிக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, இறுதி தரவரிசை மற்றும் தேர்வுப் பட்டியல் வாயிலாக பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்கள், பொது அறிவில் 75 கேள்விகளுக்கு 112.5 மதிப்பெண்கள், திறனறிவு மற்றும் மணக்கணக்கு பாடத்தில் 25 கேள்விகளுக்கு 37.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்கள் கிடைக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

  • tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.  
  • TNPSC Group 4 Recruitment 2026 அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
  • ஏற்கனவே One Time Registration செய்திருந்தால் உள்நுழையவும். இல்லையெனில் புதிய பதிவு செய்யவும்.
  • இதன்பிறகு, விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, கல்வித்தகுதி, வயது போன்ற தகவல்களை சரியாக உள்ளிட வேண்டும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதன் நகலை எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணமாக ரு.100, ஒருமுறை பதிவுக்கு (One Time Registration) ரூ.150 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத் துறையில் அரசு வேலை பெற விரும்பும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான இந்து மத விண்ணப்பதாரர்களுக்கு TNHRCE Recruitment 2026 ஒரு நல்ல வாய்ப்பாகும் எனவே ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை! கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu