• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

உத்தரகாண்டில் பத்ரிநாத் கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. விமானிகள் உள்பட 6 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Written BySudharsan G
Published: Oct 30, 2026, 02:59 PM IST|Updated: Oct 30, 2026, 05:18 PM IST
joinshare
ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன?  - உத்தரகாண்டில் பரபரப்பு
Image Credit: Uttarakhand Helicopter Missing | Screen Grab : X/@ANI

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஜீ எண்டர்டெயின்மெண்ட் 2ஆம் காலாண்டு வருவாய்! கடந்த ஆண்டை விட 13% உயர்வு..

ஜீ எண்டர்டெயின்மெண்ட் 2ஆம் காலாண்டு வருவாய்! கடந்த ஆண்டை விட 13% உயர்வு..

2

Explained : El Nino-வை அடுத்து La Nina தாக்குமா? இதனால் ஏற்படும் மாற்றம் என்ன?

3

ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

4

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

5

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Uttarakhand Helicopter Missing: உத்தரகாண்ட் சமோலி மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. பத்ரிநாத் கோவிலில் இருந்து வந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பத்ரிநாத் கோவில் - ஜோஷிமத் இடையேயான ஹெலிகாப்டர் மாயமாகி தொடர்பிலேயே இல்லை என மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. விமானிகள் உள்பட 6 பேர் அதில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகாப்டரில் 6 பேர்

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக சமோலி மாவட்ட ஆட்சியர் கௌரவ் குமார் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகமும் ஹெலிகாப்டர் நிறுவனமும் இணைந்து ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

விமானி கேப்டன் ஹிமான்சு, பிரதாபா, அருண், சங்கர் கௌடா, சுதீர், ஹெச்.எஸ். நட்ராஜா உள்ளிட்டோர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#WATCH | Uttarakhand: A team from the district administration is currently searching for the missing helicopter travelling from Badrinath to Dehradun. Smoke was seen rising near Chaien village in Joshimath, following the disappearance of the helicopter. There are six people on board the helicopter, including five passengers and one pilot: Chamoli district administration

— ANI (@ANI) October 30, 2026

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி உள்ளார். பனிப்பொழிவுக்கு இடையே மதியம் 1.14 மணிக்கு பத்ரிநாத் கோவிலில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஹதி பர்வத் பகுதியை நெருங்கியபோது தொடர்பை இழந்தது.

விபத்து என உறுதிப்படுத்திய முதலமைச்சர்

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அவரது X பதிவில், "ஜோஷிமத் அருகே உள்ள சாயீ கிராமத்திற்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான துயர செய்தி கிடைத்துள்ளது. மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத் துறை, மாநில பேரிடர் மீட்புப் படை இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

நானே இந்த முழு சம்பவத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். படுகாயமடைந்தவர்களை சிறந்த சிகிச்சைக்காக உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உயர் சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பத்திரமாக திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அரசு அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

தொடர்பை இழந்த ஹெலிகாப்டர்

முன்னதாக, இதுகுறித்து உத்தரகாண்டின் பொது விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "டிரான்ஸ் பாரத் விமானப் போக்குவரத்து பிரைவட் லிமிடெட் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், பத்ரிநாத் பகுதியில் இருந்து டெராடூன் சஹஸ்ரதாரா பகுதிக்கு மதியம் சுமார் 1.14 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் காணவில்லை என தெரிவிக்கபப்ட்டது.

ஜோஷிமத் பள்ளத்தாக்கின் மேல் பறக்கும்போது ஹெலிகாப்டன் அதன் தொடர்பை இழந்தது. அதேநேரத்தில், கண்காணிக்கும் அமைப்பாலும் அந்த ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை அறிய இயலவில்லை. எனவே, ஹெலிகாப்டர் எங்கிருக்கிறது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் அனைத்து ஹெலிகாப்டர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மாநில மீட்புக் குழுக்களும் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இன்னும் 6 பேரின் நிலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.

12 ஹெலிகாப்டர் விபத்துகள்

கடந்தாண்டு ஜூன் மாதத்தில், 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று உத்தரகாண்டின் கேதர்நாத்தில் இருந்து குப்காஷிக்கு சென்றபோது காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உத்தரகாண்டில் 12க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து சம்பவங்கள் அரேங்கேறியுள்ளன. அதில் 5 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
India